»   »  சிம்புவிடம் இருந்து ரூ. 1 கோடி வாங்கிக் கொடுங்க: தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்

சிம்புவிடம் இருந்து ரூ. 1 கோடி வாங்கிக் கொடுங்க: தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் லிங்குசாமி நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம்.

இயக்குனர் லிங்குசாமி சிம்புவை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டாராம். இதையடுத்து சிம்புவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி முன்பணமாக ரூ.1 கோடி கொடுத்தாராம்.

Lingusamy goes to Producers council against Simbu

லிங்குசாமிக்கு ஏகப்பட்ட நிதி பிரச்சனை ஏற்பட்டதால் சிம்பு படத்தை துவங்க முடியவில்லையாம். இதனால் அவர் சிம்புவிடம் தான் கொடுத்த ரூ.1 கோடியை திருப்பித் தருமாறு கேட்டாராம்.

அதற்கு சிம்புவோ படத்தை ஆரம்பியுங்க சார், பணத்தை கேட்காதீங்க என்று கூறிவிட்டாராம். இவரிடம் பேசி மல்லுக்கட்ட முடியாது என்று லிங்குசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

என் பணத்தை சிம்புவிடம் இருந்து வாங்கிக் கொடுங்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்துள்ளாராம்.

English summary
Director Lingusamy has reportedly filed a complaint against Simbu asking them to get his Rs. 1 crore from the AAA actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil