For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

  |

  ஹைதராபாத் : தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

  இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களைத் தொடர்ந்து தயாரித்து வந்த லிங்குசாமியின் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

  சென்ற மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முதல் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  ராயல் டிராமா தி க்ரவுன் 5வது சீசன்.. டயானா சார்லஸ் தம்பதியாக நடிக்க போகிறவர்கள் இவர்கள்தான்! ராயல் டிராமா தி க்ரவுன் 5வது சீசன்.. டயானா சார்லஸ் தம்பதியாக நடிக்க போகிறவர்கள் இவர்கள்தான்!

  குடும்பத்துடன் பார்க்கலாம்

  குடும்பத்துடன் பார்க்கலாம்

  இயக்குனர் லிங்குசாமியின் திரைப்படங்கள் என்றாலே தாராளமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் அந்த அளவிற்கு அனைவரும் விரும்பக்கூடிய குடும்ப படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். ஆனந்தம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்தின் கதையையே தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கதையை படமாக்கி அதில் வெற்றியும் பெற்றார். ஆனந்தம் படத்தில் முரளி, மம்முட்டி, அப்பாஸ், தேவயானி,ரம்பா, சினேகா டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா என பெரிய பட்டாளமே நடித்திருக்க இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான ஆகச் சிறந்த குடும்ப படங்களில் ஒன்றாக ஆனந்தம் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து வெளியான ரன் திரைப்படமும் மெகா ஹிட் வெற்றி பெற்றது. இந்த படம் இளைஞர்களை கவரும் வகையில் காதல் திரைப்படமாக வெளியாகி ஹிட்டடித்தது. இந்த நிலையில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றிய ஜி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ஜி தோல்விக்குப் பிறகு லிங்குசாமி மற்றும் அஜித் எந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

  ரொமான்டிக் ஹீரோவாக

  ரொமான்டிக் ஹீரோவாக

  ஜி சிறிய சறுக்கலை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு லிங்குசாமி தொட்டதெல்லாம் ஹிட்டோ ஹிட். ஆம் அதன் பிறகு இயக்கிய சண்டைக்கோழி அந்தாண்டு மாபெரும் வெற்றி பெற்றது. விஷாலுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக சண்டைக்கோழி அமைந்தது. இந்தப் படத்தில் ஹீரோயினியாக மீரா ஜாஸ்மின் இளமைத் துடிப்புடன் நடித்து கலக்கியிருப்பார். இவர்களுடன் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். சண்டைக்கோழி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளியது. பருத்திவீரனில் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து விட்டு அடுத்த படத்திலேயே ரொமான்டிக் ஹீரோவாக கார்த்தியை மாற்றிய புகழ் லிங்குசாமியையே சாரும். பையா படத்தில் கார்த்தியின் டிரான்ஸ்ஃபர்மெஷனை பார்த்த ரசிகர்கள் வியந்துபோயினர். படம் முழுவதும் டிராவலிங்க்கை மட்டுமே கொண்டு உருவாகி மிக வித்தியாசமான காதல் படமாக வெளியான பையா படத்தை இயக்கியதோடு தயாரித்தும் இருந்தார் லிங்குசாமி. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

   தெலுங்கிற்கு ரூட்டை மாற்றி

  தெலுங்கிற்கு ரூட்டை மாற்றி

  இந்நிலையில் 2014ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் இவருக்கு பெரும் அடியாக விழுந்தது. அஞ்சான் படத்தில் சூர்யா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோன்ற மொத்த திரையுலகையே எதிர்பார்ப்பில் வைத்திருந்த இந்த திரைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அஞ்சான் தோல்விக்கு பிறகு பல ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்த லிங்குசாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு சண்டைக்கோழி பாகம் இரண்டை இயக்கி மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படம் முதல் பாகம் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்தை தயாரித்து அதிலும் பெரும் நஷ்டத்தை கண்டார். இவ்வாறு செல்லும் இடமெல்லாம் அடி மேல் அடி விழ அடுத்த அடியை பொறுமையாக நிதானமாக எடுத்து வைக்க நினைத்த லிங்குசாமி ரூட்டை மாற்றி தெலுங்கு திரைப்படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார்.

  வில்லனாக ஆதி

  வில்லனாக ஆதி

  ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இப்படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் லிங்குசாமி இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட உள்ளார். ராம் பொத்தினேனியின் 19வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக "உப்பென்னா" புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிகர் ஆதி நடிக்கிறார். மேலும் நாசர் மற்றும் நதியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

  முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது

  சமீபத்தில் கூட படப்பிடிப்பில் சீரியஸான காட்சி கீர்த்தி ஷெட்டி நடிப்பில் எடுக்கப்பட்ட போது அவரால் சரியாக நடிக்க முடியாமல் பல டேக்குகள் வாங்கியும் நீண்ட நேரமாக நடிப்பே வரவில்லை என படப்பிடிப்பில் லிங்குசாமி கோபத்தில் கீர்த்தி ஷெட்டியை திட்டிய செய்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. அதன் பிறகு கீர்த்தி ஷெட்டியும் லிங்குசாமியும் வழக்கம் போல படப்பிடிப்பில் சகஜமாக இருந்தனர் என கூறப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தின் 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவங்க படக்குழு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் வெளியாகிறது.

  English summary
  director lingusamy's telugu debut with ram pothineni film's first schedule shooting is wrapped up. in this movie keethi shetty played in female lead. sources close to movie team said that 50 percent of the shooting is completed.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X