Don't Miss!
- Finance
பிடன் அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்.. எப்படி எதிர்கொள்ளப் போகிறது அமெரிக்கா?
- News
400அடி பள்ளம்.. 8நாள் போராட்டம் -நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபர் மீட்பு - நடந்தது என்ன?
- Sports
உப்புக்கு சப்பு இல்லாத போட்டி..? யார் சொன்னது ? கடைசி ஐபிஎல் லீக் போட்டியின் சம்பவங்கள்
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Lifestyle
வார ராசிபலன் 22.05.2022-28.05.2022 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லிங்குசாமியின் ’தி வாரியர்‘ இந்தி டப்பிங் உரிமை... எத்தனை கோடிக்கு விற்பனை ஆச்சு தெரியுமா?
சென்னை : தி வாரியர் திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை படைத்துள்ளார்.
தி வாரியர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ. 9 லட்சம் பணப்பெட்டியை கண்ணில் காட்டிய பிக் பாஸ்.. தாமரையை எடுக்கச் சொல்லி தூண்டிய பாவனி!
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தி வாரியர்
விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் தி வாரியர் படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில், இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழ் இயக்குனருடன் இணைந்துள்ளார். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

16 கோடிக்கு விற்பனை
இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு படம் ஒன்றின் டப்பிங் உரிமை இவ்வளவு கோடிக்கு விற்கப்படுவது இதுதான் முறையாகும். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா' படம் இந்தியிலும் சூப்பர் ஹிட்டானதால், தென்னிந்திய படங்களின் டப்பிங் உரிமைக்கும் இப்போது அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன்
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக மிரட்டலான இருந்தார் ராம். தி வாரியர் திரைப்படம் வழக்கமான போலீஸ் கதை அம்சத்தைக் கொண்ட திரைப்படமாக இல்லாமல், பார்வையாளர்கள் ரசிக்கும் படி அதிரடி காட்சிகள் நிறைந்த சுவாரசியமான திரைப்படமாக இருக்கும் என்று லிங்குசாமி தெரிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.