»   »  சிம்புவுடன் கைகோர்க்கும் லிங்குசாமி?: அப்போ அந்த ரூ.1 கோடி பஞ்சாயத்து?

சிம்புவுடன் கைகோர்க்கும் லிங்குசாமி?: அப்போ அந்த ரூ.1 கோடி பஞ்சாயத்து?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லிங்குசாமி சிம்புவை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிம்புவை அணுகி கதை சொல்லி முன்பணமாக ரூ.1 கோடி கொடுத்தார். இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கிய லிங்குசாமியால் சிம்பு படத்தை துவங்க முடியாமல் போனது.

Lingusamy to work with Simbu?

இந்நிலையில் லிங்குசாமி சிம்புவிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்க அவரோ பணத்தை கேட்காதீங்க, படத்தை துவங்கலாம் என்றார். இதையடுத்து சிம்பு மீது லிங்குசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறப்பட்டது.

இந்த சூழலில் லிங்குசாமி சிம்புவை வைத்து பட வேலைகளை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் வரை போன பஞ்சாயத்து என்ன ஆனது என நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

சிம்பு ரசிகர்களோ லிங்கு, சிம்பு காம்பினேஷன் தெறிக்கப் போகிறது என்கிறார்கள்.

English summary
Buzz is that director Lingusamy is all set to work with Simbu. Earlier it was reported that Lingusamy gave a complaint against Simbu in the producers council.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil