»   »  ஆர்யா- அனுஷ்காவின் 'முத்தத்தில்' கை வைத்த தணிக்கைக் குழு

ஆர்யா- அனுஷ்காவின் 'முத்தத்தில்' கை வைத்த தணிக்கைக் குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா - அனுஷ்காவின் முத்தக் காட்சியை கட் செய்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடியை இறக்கியிருக்கின்றனர் சென்சார் போர்டு குழுவினர்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வருகின்ற 27ம் தேதி உலகம் முழுவதும் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற லிப் லாக் காட்சிகளை வெட்டித் தள்ளியிருக்கிறது சென்சார் போர்டு.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

ஆர்யா - அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் வருகின்ற 27 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆர்யா, அனுஷ்காவுடன் இணைந்து ஏராளமான தமிழ் - தெலுங்கு நட்சத்திரங்கள் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

குண்டு குண்டு பெண்ணே

குண்டு குண்டு பெண்ணே

இப்படத்தில் 20 கிலோ உடல் எடையை அதிகரித்து குண்டு பெண்ணாக அனுஷ்கா நடித்திருக்கிறார். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

லிப் லாக் காட்சி

லிப் லாக் காட்சி

இந்நிலையில் படத்தில் ஆர்யா - அனுஷ்கா இடையில் இடம்பெறும் லிப் லாக் காட்சியைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளிக்க முன்வந்துள்ளனர். ஆனால் யூ/ஏ சான்றிதழை பெற்றால் வரிவிலக்கு பெற முடியாது என்று படக்குழுவினர் வாதம் செய்திருக்கின்றனர்.

கத்திரி போட்ட அதிகாரிகள்

கத்திரி போட்ட அதிகாரிகள்

இதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெறும் லிப் லாக் காட்சிகளில் தணிக்கைக் குழுவினர் தங்கள் கைவரிசையைக் காட்டி அதனைக் குறைத்திருக்கின்றனர். தணிக்கைக் குழுவினரின் கத்திரியைத் தொடர்ந்து யூ சான்றிதழ் இஞ்சி இடுப்பழகிக்கு கிடைத்திருக்கிறது.

    English summary
    Coming 27th Inji Iduppazhagi Movie Released in Worldwide, now Arya - Anushka's Lip Lock Scene Cut From this Movie.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil