»   »  தொழில் அதிபரை மணக்கும் நடிகை: லிப் டூ லிப் போட்டோ போட்டு அறிவிப்பு

தொழில் அதிபரை மணக்கும் நடிகை: லிப் டூ லிப் போட்டோ போட்டு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தனது காதலர் தினோ லால்வானியை திருமணம் செய்யப்போவதை லிப் டூ லிப் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

மலையாளி தந்தைக்கும், ஆஸ்திரேலிய தாய்க்கும் பிறந்தவர் நடிகை லிசா ஹேடன். ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் வளர்ந்த அவர் பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்தார்.

Lisa Haydon announces wedding in style

கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார் லிசா. அவரும் தொழில் அதிபருமான தினோ லால்வானியும் ஓராண்டு காலமாக காதலித்து வருகிறார்கள்.

அண்மையில் இருவரும் சேர்ந்து கிரிஸுக்கு சுற்றுப்பயணம் சென்றனர். இந்நிலையில் தான் தினோவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக லிசா சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

திருமணத்தை அறிவிக்க அவரும், தினோவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லிசா.

English summary
Bollywood actress Lisa Haydon announced her wedding with beau Dino Lalvani in style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil