»   »  இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் விவாகரத்து கேட்டு லிஸி மனு!

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் விவாகரத்து கேட்டு லிஸி மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் விவாகரத்து கேட்டு நடிகை லிஸி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சிறைச்சாலை உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் ப்ரியதர்ஷன். நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லிஸி. பிரியதர்ஷனும், லிசியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

Lissy files divorce papers

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியதர்ஷன், லிஸி ஆகியோருக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் கீழமை நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொள்வதாகக் கூறினார்கள்.

இதையடுத்து உயரிநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில், லிஸியும், பிரியதர்ஷனுக்கும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

English summary
Actress Lissy has filed divorce papers in family court today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil