»   »  இதெல்லாம் யார் நடிச்சிருக்க வேண்டிய படங்கள் தெரியுமா?

இதெல்லாம் யார் நடிச்சிருக்க வேண்டிய படங்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

'இன்னார்க்கு இன்னார் என்று' என்பது திருமணத்தில் மட்டுமல்ல, சினிமாவிலும் நடக்கும். சில புகழ்பெற்ற படங்கள் வேறு ஒருவர் நடிக்க வேண்டி இருந்திருக்கும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வேறொருவர் நடித்து படத்தின் ரிசல்ட்டே மாறியிருக்கும். அப்படி சில படங்களை லிஸ்ட் எடுத்தோம்.

அரவிந்த்சாமி - ராஜிவ் மேனன்

அரவிந்த்சாமி - ராஜிவ் மேனன்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் கவிதாலயா தயாரிப்பில் வெளியாகி நாட்டையே உலுக்கிய ரோஜா படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது ராஜீவ் மேனன். மேக்கப் டெஸ்டெல்லாம் எடுத்தபிறகு அவர் நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டதால் அரவிந்த்சாமி உள்ளே வந்து இளம்பெண்களின் ஆதர்ச நாயகனானார்.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

எந்திரன் படம் கமல் நடித்திருக்க வேண்டிய படம். கமலை வைத்து ஃபோட்டோஷூட் எல்லாம் எடுத்த நிலையில் கமலிடம் இருந்து ரஜினி கைக்கு தஞ்சம் புகுந்தான் எந்திரன். எந்திரனின் மாபெரும் வெற்றியை நாம் சொல்ல வேண்டுமா என்ன?

விஜய் சேதுபதி - வடிவேலு

விஜய் சேதுபதி - வடிவேலு

சூது கவ்வும் கதையை வடிவேலுவை வைத்து எடுக்கத்தான் அதிகம் முயற்சி செய்தார் நலன் குமாரசாமி. அவர் விருப்பம் காட்டாததால் விஜய் சேதுபதி சூது கவ்வும் உள்ளே வந்தார். வயதுக்கு மீறிய வேடத்தை கனகச்சிதமாக செய்து பிளாக்பஸ்டர் ஆக்கினார் விஜய் சேதுபதி.

தனுஷ் - விஜய்

தனுஷ் - விஜய்

அனேகன் படம் விஜய்க்காக உருவான சப்ஜெக்ட். சில தவிர்க்க முடியாத காரணங்களால் விஜய்க்கு பதிலாக தனுஷ் நடித்தார். தனுஷுக்காக சில மாற்றங்கள் செய்திருந்தார் கே.வி.ஆனந்த்.

ஷாலினி - வசுந்தரா தாஸ்

ஷாலினி - வசுந்தரா தாஸ்

அலைபாயுதே படத்தின் சக்தி கதாபாத்திரத்தில் நடித்த ஷாலினி நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். அந்த வேடம் முதலில் செய்யவிருந்தது வசுந்தரா தாஸ். வசுந்தரா தாஸுக்கும் மாதவனுக்கும் ஜோடிப்பொருத்தம் சரியில்லாததால் ஷாலினி கொண்டுவரப்பட்டார்.

ஜெய் - சிவகார்த்திகேயன்

ஜெய் - சிவகார்த்திகேயன்

ராஜாரானியில் ஜெய் நடித்த கேரக்டர் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. அட்லீயும் சிவாவும் நண்பர்கள் என்பதால் படத்தின் கதை உருவானதில் இருந்தே சிவாவை மனதில் வைத்திருந்தவர் புராஜக்ட் பெரிய லெவலுக்கு போனதும் அப்போது சின்ன ஆளாக இருந்த சிவாவை கழற்றி விட்டுவிட்டார் அட்லீ. சிவாவுக்கு பதிலாக வந்தவர் தான் ஜெய்.

பூஜா குமார் - சோனாக்‌ஷி சின்ஹா

பூஜா குமார் - சோனாக்‌ஷி சின்ஹா

விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருக்கு பதிலாக நடித்திருக்க வேண்டியது சோனாக்‌ஷி சின்ஹா. தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க முடியாததால் அவருக்கு பதிலாக அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்த பூஜா குமாரைக் கூட்டி வந்தார் கமல்.

தமன்னா - ஸ்ருதி ஹாசன்

தமன்னா - ஸ்ருதி ஹாசன்

தோழா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஸ்ருதி ஹாசன். ஆனால் அவர் புலிக்கு கால்ஷீட்டை கொடுத்துவிட்டு சொதப்பியதால் அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் ஆனார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் வரை போனது.

குத்து ரம்யா - காஜல் அகர்வால்

குத்து ரம்யா - காஜல் அகர்வால்

பொல்லாதவன் படத்தில் குத்து ரம்யா நடித்த பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்க வேண்டியது. காஜலுக்கு பதிலாகத் தான் உள்ளே வந்தார் குத்து ரம்யா.

ஜோதிகா - சிம்ரன்

ஜோதிகா - சிம்ரன்

சந்திரமுகியில் சந்திரமுகியாக வந்து மிரட்டியிருக்க வேண்டியது சிம்ரன் தான். அந்த படத்தில் வரும் ஓவியத்தை பார்த்தாலே இது புரியும். சிம்ரன் கர்ப்பமானதால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஜோதிகா சந்திரமுகியாக கலக்கியிருந்தார்.

எமி ஜாக்ஸன் - சமந்தா

எமி ஜாக்ஸன் - சமந்தா

ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு பதிலாக சமந்தாவைத்தான் நடிக்க வைக்க ஆசைப்பட்டார் ஷங்கர். ஆனால் தோல் அலர்ஜி பிரச்சினையால் சமந்தா நடிக்க முடியாமல் போனது. எமி ஜாக்சன் உள்ளே வந்தார். அதோடு ரஜினிக்கே ஹீரோயினாகி விட்டார்.

இந்த லிஸ்டில் அஜித் தவறவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோ நடித்த படங்களை சேர்த்தால் அதுவே தனி லிஸ்டாக வரும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்வோம்.

- ஆர்ஜி

English summary
List of hit movies missed by heroes heroines those changed the result.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil