»   »  மெய்யாலுமே ‘இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பா’...!

மெய்யாலுமே ‘இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பா’...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலப்பா எனச் சொல்லும் அளவிற்கு இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களின் பெரும்பாலான தலைப்பு அமைந்துள்ளது.

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என சில நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவிற்கு உள்ளது.

பல படங்களின் தலைப்பைக் கேட்கும் போது, அட இப்டி ஒரு படம் ரிலீஸ் ஆச்சா என ஆச்சர்யப்பட வைக்கின்றனர்.

இதோ, அவற்றின் தொகுப்பு...

விஷயம் வெளியே தெரியக் கூடாது...

விஷயம் வெளியே தெரியக் கூடாது...

ராகவேந்திரா இசையமைத்து, இயக்கிய இப்படத்தில் ஆர்யன், செண்ட்ராயன் நாயகர்களாக நடித்திருந்தனர். அமிதா நாயகியாக நடித்திருந்தார். ஜனவரி மாதம் இப்படம் ரிலீசானது.

கிழக்கே உதித்த காதல்...

கிழக்கே உதித்த காதல்...

பாரதிராஜாவின் கிழக்கே போன ரயில் போலவே, இந்தப் படத்தின் பெயரும் உள்ளது. ஆனால், இந்தக் காதல் தேறவில்லை. முனிசங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆர்யன் நாயகனாகவும், லிசா, சுமலதா நாயகிகளாகவும் நடித்திருந்தனர்.

அப்பாவிக் காட்டேரி...

அப்பாவிக் காட்டேரி...

காட்டேரில என்னய்யா அப்பாவி, பெரும்பாவினு கேள்விக் கேட்கத் தூண்டும் அளவிற்கு உள்ளது இந்தப் படத்தலைப்பு. அலி அக்பர் இயக்கிய இப்படத்தில் ரஃபீக் நாயகனாகவும், மீரா நாயகியாகவும் நடித்திருந்தனர்.

பொங்கி எழு மனோகரா...

பொங்கி எழு மனோகரா...

சிவாஜியின் பிரபல வசனமாக பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகராவில் இருந்து பாதியை கட் பண்ணி தலைப்பாக்கி இருக்கிறார்கள். ரமேஷ் ரங்கசாமி இயக்கிய இப்படத்தில் இர்பான் தான் நாயகன்.

மனித காதல் அல்ல...

மனித காதல் அல்ல...

அக்னி இயக்கி நாயகனாகவும் நடித்த படம் இது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. மனிதக் காதல் இல்லை என்றால் வேறு என்ன காதல் என்பதை இவர்கள் நம்மிடம் சொல்லவே இல்லை பாஸ்!

ரொம்ப நல்லவண்டா நீ...

ரொம்ப நல்லவண்டா நீ...

இப்படியும் ஒரு படத்திற்கு தலைப்பு. ஏ.வெங்கடேஷ் இயக்கிய இப்படத்தின் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்திருந்தார். சிம்புவின் கெட்டவனுக்குப் போட்டிப் படமான்னு தெரியலே.

மகா மகா...

மகா மகா...

மகா மகா, சேர்ந்து போலாமா, இவனுக்கு தண்ணில கண்டம், சொன்னாப் போச்சு, ஆயா வடை சுட்ட கதை, இரவும் பகலும் வரும், கடவுள் பாதி மிருகம் பாதி, மூச், பட்ற, சார்லஸ் ஷபீக் கார்த்திகா என கடந்த மார்ச் மாதம் வெளியான தமிழ்ப் படங்களின் வித்தியாசமான தலைப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேயுடன் ஒரு பேட்டி...

பேயுடன் ஒரு பேட்டி...

ஏப்ரல் மாதம் கொஞ்சம் வித்தியாசமான படத்தலைப்புக்கு விடுமுறை விட்ட தமிழ் சினிமா. மீண்டும் மே மாதம் தன் ஆட்டத்தைத் தொடங்கியது. நீயும் நானும் நிலவும் வானும், பேயுடன் ஒரு பேட்டி, திறந்திடு சீசே, கருத்த பொண்ணு செவத்த பையன் என கலந்து கட்டி அடித்தது.

இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலப்பா...

இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலப்பா...

மிஸ் பண்ணீடாதீங்க அப்புறம் வருத்தப் படுவீங்க இப்படியும் ஒரு படம் வெளியானது. ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், அழகே இல்லாத அழகான கதை, குரங்கு கைல பூமாலை, வந்தா மல, அகிலா முதல் வகுப்பு, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, இவங்க அலுச்சாட்டியம் தாங்க முடியலப்பா என மே, ஜூன், ஜூலை மாதங்களில் பல வித்தியாசமான தலைப்புகளில் சினிமாக்கள் ரிலீசானது.

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு...

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு...

எப்போ சொல்லப் போற, ஜவ்வு மிட்டாய், திரிஷா இல்லண்ணா நயன்தாரா, திருட்டு விசிடி, உனக்கென்ன வேணும் சொல்லு, ஜிப்பா ஜிமிக்கி, டம்மி டப்பாசு, சிக்கிக்கு சிக்கிக்கிச்சு, பள்ளிக்கூடம் போகாமலே, விரைவில் இசை, இனிய உளவாக, கிரிங் கிரிங், நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க, உயிர் வரை இனித்தாய், வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என இந்தப் பட்டியலை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

English summary
This is a list of Tamil language films produced in the Tamil in 2015. Over 200 Tamil films released in this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil