»   »  பெரிய வில்லன் பிரகாஷ்ராஜுடன் குட்டி ஹீரோ: சோ க்யூட்

பெரிய வில்லன் பிரகாஷ்ராஜுடன் குட்டி ஹீரோ: சோ க்யூட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் பிசியாக உள்ளார் பிரகாஷ் ராஜ். பிரியதர்ஷன் இயக்கத்தில் சில சமயங்களில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இடையிடையே குடும்பத்தாருடன் நேரம் செலவிடத் தவறாதவர் பிரகாஷ் ராஜ். நேற்று முன்தினம் அவர் தனது மனைவி போனி வர்மா மற்றும் மகன் சித்துவுடன் நேரம் செலவிட்டுள்ளார்.

குட்டிப் பையனை ஒரு கையில் பிடித்தபடி அவர் நின்றபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

குடும்பத்துடன் ஒரு நாள்...விவசாயம்... குட்டி ஹீரோ பெரிய வில்லனுடன் போஸ் கொடுப்பதாக எனது மனைவி கூறுகிறார்#vedhanthprakashraj.. என தெரிவித்துள்ளார்.

English summary
Actor Prakash Raj has spent a day with his little son and posted a picture on twitter saying that, 'A day of With my family ..farming..blisss. My wife says little hero posing with a big villain 😀😀😀.. #vedhanthprakashraj..'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil