»   »  லிவிங் டுகெதர் நடிகைக்கு கல்யாணம்... தேதி குறிச்சாச்சு!

லிவிங் டுகெதர் நடிகைக்கு கல்யாணம்... தேதி குறிச்சாச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : நடிகை லேகா வாஷிங்டன் ஆங்கில சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகை ஆனவர்.

இவர் 'உன்னாலே உன்னாலே', 'ஜெயம் கொண்டான்', 'கல்யாண சமையல் சாதம்', 'அரிமா நம்பி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இதுதவிர பல இசை ஆல்பங்களிலும் பாடி ஆடியுள்ளார்.

லிவிங் டு-கெதர்

லிவிங் டு-கெதர்

லேகா வாஷிங்டனும் மும்பையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார்கள். மும்பையில் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள்.

முறைப்படி திருமணம்

முறைப்படி திருமணம்

இப்போது இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். வருகிற 18-ம் தேதி மும்பையில் உள்ள அலிபாக்கில் எளிய முறையில் லேகா, பப்லோ சட்டர்ஜி திருமணம் நடக்க இருக்கிறது.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

லேகா வாஷிங்டன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் இரு மதத்தின் சடங்குகள்படியும் திருணம் நடக்கவில்லை. பொதுவான முறையில் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தாலி கட்டமாட்டார்

தாலி கட்டமாட்டார்

இரு மதங்களின் சடங்குகளின்படியும் திருமணம் நடைபெறாததால் மோதிரம் மாற்றுதல், தாலி அணிவித்தல் போன்ற நிகழ்ச்சி எதுவும் இருக்காது. அன்றைய தினமே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

English summary
Lekha Washington, who has acted in films including 'Unnalale Ullalale', 'Jayam Kandan', lives in the Living-Duker with a journalist from Mumbai. Now they have decided to marry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil