»   »  பிரம்மா படத்தில் 'ஜோ'வின் ஜோடியாக லிவிங்ஸ்டன்... ரகசியம் காக்கும் படக்குழு

பிரம்மா படத்தில் 'ஜோ'வின் ஜோடியாக லிவிங்ஸ்டன்... ரகசியம் காக்கும் படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தில் லிவிங்ஸ்டனும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு ரகசியம் காத்து வருகிறது.

திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார். அப்பட வெற்றியைத் தொடர்ந்து குற்றம் கடிதம் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்...

நட்சத்திரப் பட்டாளம்...

இப்படத்தில் ஜோதிகாவுடன் பானுப்பிரியா, சரண்யா, ஊர்வசி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த நட்சத்திரக் கூட்டணியில் லிவிங்ஸ்டனும் நடிப்பது தெரிய வந்துள்ளது.

லிவிங்ஸ்டன்...

லிவிங்ஸ்டன்...

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் லிவிங்ஸ்டன். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்கிறார் இயக்குநர் பிரம்மா.

கிராமத்துப் பெண்...

கிராமத்துப் பெண்...

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தாய்ப்பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிகா கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

ஜோவிற்கு ஜோடி...?

ஜோவிற்கு ஜோடி...?

எனவே, இப்படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக லிவிங்ஸ்டன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. காரணம் இப்படத்தில் ஜோதிகாவின் ஜோடி யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

சூர்யா...

சூர்யா...

முன்னதாக இப்படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக சூர்யாவே நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சிலப்பல காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பதாகக் கூறப்படுவதால் அவர் ஜோதிகாவிற்கு ஜோடியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

யாருடா மகேஷ்...

யாருடா மகேஷ்...

ஏற்கனவே விரலுக்கேத்த வீக்கம், சொல்லாமலே, சுந்தரபுருஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் லிவிங்ஸ்டன். இவர் கடைசியாக சில வருடங்களுக்கு முன்னர் யாருடா மகேஷ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Livingston, who was last seen in Yaaruda Mahesh has now signed on director Bramma's upcoming film with Jyotika.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil