ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. பட வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: எல்.கே.ஜி. படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தெரிய வந்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி எழுதி நடித்த எல்.கே.ஜி. படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.
அதுவும் அதிகாலை காட்சியின்போது தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லானது. இந்நிலையில் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

எல்.கே.ஜி.
எல்.கே.ஜி. படம் வெளியான அன்று மட்டும் ரூ. 2.6 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதிநாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
எல்.கே.ஜி. படம் ரிலீஸான அன்று சென்னையில் மட்டும் ரூ. 32 லட்சம் வசூலித்துள்ளது. நேற்று ரூ. 51 லட்சம் வசூலித்துள்ளது. இரண்டு நாட்களில் ரூ. 83 லட்சம் வசூல் செய்திருக்கிறது.

வெற்றி
ஆர்.ஜே. பாலாஜி முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் எல்.கே.ஜி. முதல் படத்திற்கு அதிகாலை காட்சி கிடைத்ததுடன் வசூலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி
எல்.கே.ஜி. படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்ததை பார்த்து அதற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் நாளை விட கூடுதலாக 300க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











