»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

"நந்தா" கொடுத்த பிரேக்கால் விழி பிதுங்கி போய்க் கிடக்கிறார் லொடுக்குப் பாண்டி. விளைவு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக அங்குமிங்கும்ஷூட்டிங்கிற்காக அலைந்து கொண்டிருக்கிறார்.

பாப் பாடல்களால் அதாவது சென்னை பாப் பாடல்களால் வளர்ந்து வந்த கருணாஸுக்கு, "நந்தா" பெரும் பிரேக்கைக் காடுத்து விட்டது.

இதையடுத்து இப்போது அவர் சினிமாவில் பிசியாகி விட்டார். ரஜினியின் "பாபா" உள்பட பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இதனால் தனது பாப் குழுவான "மேஸ்ட்ரோ"வை நிர்வகிக்கும் பொறுப்பைத் தன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டார். அவர் தான் இப்போது"மேஸ்ட்ரோ"வின் நிர்வாகி.

இத்தனை படங்களின் பிசிக்கு மத்தியிலும் ஒரு பாப் ஆல்பத்தை தயார் செய்துள்ளாராம் கருணாஸ். "கூத்தாடி கைஸ்" என்று இதற்குப் பெயரும் வைத்துள்ளார்."பாபா" படத்திற்குப் பிறகு "கூத்தாடி கைஸ்" ரிலீஸ் ஆகுமாம். இந்த ஆல்பத்தை ரஜினியே வெளியிட்டாலும் ஆச்சரியமில்லையாம்.

இத்தனைக்கு மத்தியிலும் கருணாஸிடம் ஒரு சந்தோஷமான வருத்தம் உள்ளது. எல்லாப் படங்களிலும் லொடுக்குப் பாண்டி போலவே நடிக்கச்சொல்கிறார்களாம்.

நிலைமை இப்படியே போனால் விரைவிலேயே பீல்டை விட்டுக் காணாமல் போய் விடுவோம் என்பதால் அதை அன்பாக மறுத்து விட்டு வித்தியாசமாகநடிக்கவே விருப்பம் என்று கூறி வருகிறாராம் கருணாஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil