ப்ளீஸ்...என் நண்பனை அப்படி சொல்லாதீங்க...அப்செட் ஆன லோகேஷ் கனகராஜ்
சென்னை : விக்ரம் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் டைரக்டர் ஆகி மாறி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
வெற்றி பட டைரக்டராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் லோகேஷ். இதுவரை 4 படங்களை இயக்கி, நான்கையும் வெற்றி படங்களாக தந்தவர் என்பவதால் இவர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இவரது அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
கமலின் விக்ரம் படம் தொடர்ந்து உலகம் முழுவதும் வெறித்தனமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து தளபதி 67, விக்ரம் 3 என வரிசையாக லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் நாளுக்கு நாள் லோகேஷின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

லோகேஷை பார்த்து கத்துக்கோங்க
அதே சமயத்தில் விக்ரம் படத்தை பார்த்து விட்டு பலரும், டைரக்டர் நெல்சன் திலீப்குமாரை செமயாக கலாய்த்து வருகின்றனர். எப்படி படம் இயக்க வேண்டும் என லோகேஷை பார்த்து கத்துக்கோங்க என கூறி வருகின்றனர். நெல்சன் இயக்கிய இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படம், கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக மோசமான விமர்சனங்களையே அதிகம் பெற்றுள்ளது. பலரும் இதை தோல்வி படம் என்றே சொல்லி வருகிறார்கள்.

நெல்சனை எங்கப்பா காணோம்
பீஸ்ட் படத்தை வைத்து நெல்சனை ஓவராக நெட்டிசன்கள் கலாய்த்து வருவதால் சோஷியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருக்கிறார் நெல்சன். இந்த சமயத்தில் ரஜினியின் 169 படத்தை நெல்சன் இயக்க உள்ளதால் அதை வைத்தும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜுடன் ஒப்பிட்டு நெல்சனை வாங்கு வாங்கென வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஒப்பிட்டு பேசுவது வருத்தமளிக்கிறது
ஆனால் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களின் இந்த செயல் தன்னை மிகவும் வருத்தமடைய செய்வதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு கமெண்ட் செய்வது, மீம் போடுவது சரியான செயல் கிடையாது. நெல்சனை வைத்து ஜோக்ஸ், மீம்கள் வருவது கஷ்டமாக உள்ளது. நெல்சன் என்னுடைய நல்ல நண்பர். வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
Recommended Video

ப்ளீஸ் என் நண்பனை அப்படி சொல்லாதீங்க
அதோடு, தயவு செய்து இது போன்ற செயல்களை நிறுத்துங்கள். யாரையும் அவர்களின் வேலையை வைத்து கிண்டல் செய்து, காயப்படுத்தாதீர்கள். தனது நண்பரை அப்படி யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். லோகேஷ் கனகராஜின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. லோகேஷ் கனகராஜுன், நெல்சன் திலீப்குமாரும் ஒரே சமயத்தில் சினிமாத்துறைக்கு வந்தவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள்.


Click it and Unblock the Notifications











