Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : ஜெட் வேகத்தில் திமுக.. சட்ட உதவிகளுக்காக "வார் ரூம்"!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இதெல்லாம் சரியா வருமா… சீண்டிய பாகுபலி ஹீரோ: கதை சொல்லி மிரட்டிய லோகேஷ் கனகராஜ்
சென்னை: விக்ரம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து தளபதி 67 படத்துக்காக தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படமும் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 67க்குப் பிறகு கைதி 2, விக்ரம் சீக்வெல் என திட்டமிட்டுள்ள லோகேஷ், தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைக்கவுள்ளாராம்.
விக்ரம்
பட
நடிகர்
வீட்டில்
’குவா
குவா’
சத்தம்..
43
வயதில்
ஆண்
குழந்தைக்கு
அப்பாவானார்
நரேன்!

விரைவில் தளபதி 67 அப்டேட்
கோலிவுட் ரசிகர்களை அதிகம் ஹைப்பில் வைத்துள்ளது 'தளபதி 67' திரைப்படம் தான். விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால், நாளுக்கு நாள் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வாரிசு படத்தின் கடைசி ஷெட்யூலில் பிஸியாக இருக்கும் விஜய், அதை முடித்த பின்னர் தளபதி 67ல் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படம் குறித்த அப்டேட்டும் டிசம்பரில் கட்டாயம் வரும் என லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டோலிவுட் செல்லும் லோகேஷ்
லோகேஷ் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய 4 படங்களுமே, சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. முக்கியமாக விக்ரம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ், யாருமே எதிர்பார்க்காத வகையில் இருந்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் தளபதி 67ல் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் முடிந்ததும் கார்த்தி நடிப்பில் கைதி 2, விக்ரம் படத்தின் அடுத்த சீக்வெலை லோகேஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கிலும் லோகேஷ் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபாஸுடன் கூட்டணி?
பாகுபலி மூலம் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ், இப்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரபாஸின் லிஸ்ட்டில் ஆதிபுருஷ், ப்ராஜக்ட் கே போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனிடையே சமீபத்தில் பிரபாஸை சந்தித்த லோகேஷ், அவரிடம் ஒரு கதை கூறியுள்ளார். ஆனால், அந்த கதையில் இம்ப்ரஸ் ஆகாத பிரபாஸ், இன்னும் பிரம்மாண்டமான ஸ்டோரி இருந்தால் சொல்லவும் எனக் கேட்டாராம். அதன்பின்னர் லோகேஷ் சொன்ன கதையை கேட்டு மிரண்டு போன பிரபாஸ், இதில் நடிக்கிறேன் என சொன்னதாக தெரிகிறது.

டோலிவுட்டில் லோகேஷ் சினிமாட்டிக்
பிரபாஸ் ஓக்கே சொல்லிவிட்டதால், அவரது படத்திற்கான கதையையும் லிஸ்ட்டில் வைத்துள்ளாராம் லோகேஷ். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இதன்மூலம் தெலுங்கிலும் தனது சினிமாட்டிக் யுனிவர்ஸை தொடங்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டணி உறுதியானால் கைதி 2 படத்திற்கு பின்னர் பிரபாஸின் படத்தை லோகேஷ் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.