லோகேஷ் கனகராஜ் உள்ளேயும் ஒரு நடிகர் இருக்கார் பாருங்களேன்… இது எப்போன்னு தெரியுமா?
சென்னை: விக்ரமை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
விஜய் நடிக்கும் தளபதி 67 படம் குறித்த அபிஸியல் அப்டேட் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லேகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் தளபதி 67 அப்டேட்
மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் முத்திரை பதிக்க தொடங்கிய லோகேஷ், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து சம்பம் செய்து வருகிறார். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என பிரம்மாண்ட கூட்டணியில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ், அதனை மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாகவும் மாற்றிக் காட்டினார். இந்நிலையில், அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் லோகேஷ். இந்தப் படத்தின் அப்டே டிசம்பரில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் லோகேஷ் கூறியிருந்தார்.

நடிகராக களமிறங்கும் லோகேஷ்
சமீபத்தில் விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தளபதி 67 படத்தின் ஸ்கிரிப்ட்டையும் முழுவதுமாக முடித்துவிட்டார் லோகேஷ். இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படத்தில் லோகேஷ் கனகராஜும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூக்குத்தி அம்மன், எல்கேஜி, வீட்ல விஷேசம் ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி, தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தை கோகுல் இயக்குகிறார்.

கொரோனா குமார் டிராப்?
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியுள்ள கோகுல், அடுத்ததாக சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தை இயக்கவிருந்தார். ஆனால், கொரோனா குமார் படத்தின் ஷூட்டிங் குறித்து இன்னும் சிம்பு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம். அதனால், உடனடியாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை கோகுல் இயக்கி முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது.

கேமியோ ரோலில் லோகேஷ்
கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'சிங்கப்பூர் சலூன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராகவே வந்துபோவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் லோகேஷின் கேரக்டர் படத்தில் முக்கியமானதாக இருக்குமாம். இதுவரை இயக்குநராகவே மட்டுமே வலம் வரும் லோகேஷ், முதன்முறையாக நடிகராக களமிறங்குவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து லோகேஷ் நடிப்பாரா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











