Don't Miss!
- News
வீல் சேர் கூட வைத்திருக்க மாட்டீர்களா.. ட்வீட் போட்டு விமர்சித்த குஷ்பு! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா
- Lifestyle
வாஸ்துப்படி, இவற்றை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வெக்காதீங்க... இல்லன்னா அது உங்க முன்னேற்றத்தை தடுக்கும்...
- Sports
ரொம்ப சந்தோஷப்படாதீங்க.. அதிர்ஷ்டத்தால் நியூசி,யை இந்தியா வீழ்த்தியதா??.. பாக். சீனியர் விளாசல்!
- Automobiles
இவ்ளோ கம்மியான விலைக்கு இப்படி ஒரு ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவின் ஆட்டத்தை முடிக்க போகும் ஹீரோ தயாரிப்பு!
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரோலக்ஸ் ப்ரீக்வெல்.. கைதி 2.. கன்ஃபார்ம் பண்ண லோகேஷ் கனகராஜ்.. தளபதி 67ம் எல்சியூ தானா?
சென்னை: சினிமா ரவுண்ட் டேபிள் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2, விக்ரம் சீக்வெல் மற்றும் ரோலக்ஸ் ப்ரீக்வெல் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
கிட்டத்தட்ட அடுத்த 10 வருஷத்துக்கு லோகேஷ் கனகராஜ் தனது யூனிவர்ஸை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்று விடுவார் போல தெரிகிறது.
தனது அடுத்த அடுத்த படங்கள் எப்படி உருவாகப் போகிறது என்பது குறித்தும் விக்ரம் படத்தை எப்படி பண்ணேன் என்பது குறித்தும் பேசி உள்ளார்.
சூர்யாவை திடீரென சந்தித்த கேஜிஎஃப் ஹீரோ யாஷ்… ரோலக்ஸ் – ராக்கி பாய் கூட்டணிய பார்க்க ரெடியா?

சம்பவக்காரன் லோகேஷ்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். கமல்ஹாசன், ராஜமெளலி, கெளதம் மேனன் கலந்து கொண்ட சினிமா ரவுண்ட் டேபிளில் லோகேஷ் கனகராஜும் பங்கேற்று பேசினார்.

விக்ரம் பட அனுபவம்
கமல்ஹாசன் உடன் விக்ரம் படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை அந்த ரவுண்ட் டேபிள் பேட்டியில் கமல் முன்னிலையிலேயே ஷேர் செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. லோகேஷ் கனகராஜின் திறமையை கமலும் அடிக்கடி பாராட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.

தளபதி 67 நெக்ஸ்ட்
விஜய்யுடன் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீண்டும் அவரை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். அதற்கான பூஜை சமீபத்தில் படு சீக்ரெட்டாக ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டது. த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் தளபதி 67ல் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுவும் யூனிவர்ஸ் தானா
இவர்கள் மட்டுமின்றி கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி கூட ஸ்பெஷல் கேமியோவாக தளபதி 67 படத்தில் நடிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸாகவே இந்த படம் இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. கெடா மீசை உடன் விஜய் சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் டிரெண்டாகி அடுத்த சம்பவத்துக்கு லோகேஷ் மற்றும் விஜய் ரெடியாகிட்டாங்க என கமெண்ட்டுகள் பறந்தன.

கைதி 2
தளபதி 67 படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்து கார்த்தியின் கைதி 2 படத்தை ஆரம்பிக்க ரெடியாகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 படத்திற்கு பிறகு கார்த்தியின் கைதி 2 அடுத்து விக்ரம் படத்தின் சீக்வெல் மற்றும் ப்ரீக்வெல் என யூனிவர்ஸில் பல படங்கள் காத்திருக்கின்றன என்றார் லோகேஷ் கனகராஜ்.

ரோலக்ஸ் ப்ரீக்வெல்
விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் சில நிமிடங்கள் வந்து செல்லும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்த ஆண்டு மறக்க முடியாத கேரக்டராக மாறி உள்ளது. ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், ஸ்டாண்ட் அலோன் படமாக ரோலக்ஸ் உருவாகும் என்றும் பேசியுள்ளார்.