வாத்தி கம்மிங் ஒத்து.. கிரிக்கெட் பேட் உடன் போர்கொண்ட சிங்கமாக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்!

சென்னை: தளபதி 67 படத்தின் அப்டேட் உடன் லோகேஷ் கனகராஜ் வரப் போகிறார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கிரிக்கெட் பேட் உடன் லோகேஷ் கனகராஜ் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா பிரபலங்களுக்கும் கொடுத்து மாஸ் காட்டி வருகிறார்.

அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்கப் போகும் நிலையில், ரசிகர்கள் அதன் அப்டேட்டை வெறித்தனமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்

பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்

கொரோனா காலத்தில் மற்ற படங்களை வெளியிட முடியாமல் பல பெரிய படங்கள் திணறிக் கொண்டிருந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்து மக்கள் கூட்டத்தை தியேட்டருக்கு வரவைத்த லோகேஷ் கனகராஜ், ஈகிள் இஸ் கம்மிங் என கமல்ஹாசனுக்கு செம க்ரிப்பான ஒரு படத்தை கொடுத்து 450 கோடி வசூல் சாதனை படைக்க செய்த பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்த சம்பவம்

அடுத்த சம்பவம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆகிவிட்டார் என்பதை அறிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் விரைவில் தளபதி 67 படத்தோட தரமான அப்டேட் உடன் தலைவன் வரப் போகிறான் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கூட தளபதி 67 அப்டேட் வருமா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தது ஏமாந்து போனது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் பேட் உடன்

கிரிக்கெட் பேட் உடன்

இந்நிலையில், ஒய்எம்சிஏ மைதானத்தில் கிரிக்கெட் பேட் உடன் கல்லூரி மாணவர்களுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிரிக்கெட் விளையாட களமிறங்கிய புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவையே திணற வைத்து வருகிறது. செம ஃபிட்டாகவும் செம க்யூட்டாகவும் இருக்கும் லோகேஷ் கனகராஜை பார்த்து ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் கொடுண்ணா என கேட்டு வருகின்றனர்.

தீபாவளிக்கு வருமா

தீபாவளிக்கு வருமா

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் தளபதி 67 படத்தின் அப்டேட் என விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு டபுள் ட்ரீட் இருக்கு என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிரிக்கெட் பேட் உடன் களமிறங்கும் போட்டோக்களை ஷேர் செய்து போர் கொண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X