பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஆண்டவர்...பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் அசத்தலாக வாழ்த்து பதிவிட்டார் கமலல்ஹாசன். இதற்கு லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள பதில் அனைவரையும் கவர்ந்து, லைக்குகளை அள்ளி வருகிறது.

Recommended Video

ஜூன் 3ல் 'விக்ரம்' ரிலீஸ்… ட்விட்டரில் மாஸ் Making Glimpse பகிர்ந்த கமல்!

விஜய்யின் மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்ன சொல்லி வாழ்த்தினார்

அப்படி என்ன சொல்லி வாழ்த்தினார்

அப்படி நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டிருந்தார். அதில் விக்ரம் ஷுட்டிங்கின் போது லோகேஷ் கனகராஜுடன் எடுத்த பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ள கமல், ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

உருகிப் போன லோகேஷ் கனகராஜ்

உருகிப் போன லோகேஷ் கனகராஜ்

இதற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டில், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை கமல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதற்கும் நன்றி ஆண்டவரே என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலுக்கு நன்றி சொல்லி லோகேஷ் கஜகராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

 டைரக்டராக தூண்டிய கமல் படம்

டைரக்டராக தூண்டிய கமல் படம்

டைரக்டர் லோகேஷ் கனகராஜ், கமலின் தீவிர ரசிகர். இதை அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். கமல் நடித்த சத்யா, விருமாண்டி படங்கள் தான் தன்னை டைரக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதாக லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார். டைரக்டரானதும் கமலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதை தான் தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்ததாகவும் கூறி உள்ளார்.

ஹேஷ்டேக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்

ஹேஷ்டேக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு #Master, #Thalapathy67 என லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களின் பெயர்களில் ஹேஷ்டேக் உருவாக்கி வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். விஜய்யுடன் மீண்டும் இணைய போகும் படத்திற்காக காத்திருப்பதாகவும், கைதி 2 படத்திற்காக காத்திருப்பதாகவும் அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X