லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்...இதுக்கு தான் தவமாய் தவம் இருந்தாரா
சென்னை : தனது 36 வருட தவம் நிறைவேறி உள்ளதாக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அப்படி என்ன நடந்தது, இவர் எந்த விஷயத்திற்காக இத்தனை ஆண்டுகள் தவம் இருந்தார் என அனைவரும் ஆச்சரியமும், குழப்பமுமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2017 ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவரே எழுதி இயக்கிய இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி, மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தார் லோகேஷ்.

இப்படி கூட ஹிட் கொடுக்கலாம்
ஹீரோவின் மாஸ் என்டரி, ஹீரோயின், பாடல், கலர்ஃபுல் லொகேஷன், ஃபாரின் லொகேஷன், பிரம்மாண்டம் என எதுவும் இல்லாமல், ஒரு கைதியின் வாழ்க்கையில் ஒரு ராத்திரியில் நடக்கும் சம்பவத்தை மட்டுமே வைத்து ஒரு படத்தை ஹிட்டாக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர் லோகேஷ் கனகராஜ். பிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்து, கொரோனா காலத்தில் ரிலீஸ் செய்தும் 100 கோடி வசூல் செய்தவர் லோகேஷ் கனகராஜ்.

கமலை இயக்கிய லோகேஷ்
கமலின் மிக தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டது முதல் அதற்கு பிறகு வெளியிடப்படும் ஒவ்வொரு அப்டேட்டும் அனைவரையும் மிரள வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது. இதனால் படம் நிச்சயம் ஹிட் ஆகும் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வரும் கமல் படம் என்பதை விட, அவரின் ரசிகரான லோகேஷ் இந்த படத்தை எப்படி இயக்கி இருப்பார் என்பதில் தான் அனைவரின் ஆர்வமும் உள்ளது.

லோகேஷின் 36 வருட தவம்
இந்நிலையில் கமலுடன் இருக்கும் லோட்டோ ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், 36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்ட என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விக்ரம் படத்தை கமல் பார்த்து விட்டார். படத்தை பார்த்து விட்டு லோகேஷை அவர் பாராட்டி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

கமல் போட்ட பாராட்டு விதை
லோகேஷ் கனகராஜின் இந்த ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த படம் நிச்சயம் சினிமா காதலர்களுக்கு மிகப் பெரிய திருவிழாவாக தான் இருக்கும். உலக நாயகனுக்கு தனது ரசிகர் இயக்கிய இந்த படம் மிகப் பெரிய Come back ஆக இருக்கும். 30 தே நாள் உலகமெங்கும் திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாராட்டுக்கள் வந்து குவிய, அதற்கான விதை இன்று உலகநாயகர் அவர்களிடம் இருந்து. அவர் படத்தை பார்த்ததுக்கே கைதி, மாஸ்டர்னு கலக்கியவர். இன்று அவரை வைத்து இயக்கும் போது சும்மாவா விட்ருவீங்க. வேட்டையாடி விளையாடியிருப்பீங்க என நெட்டிசன்கள் பலரும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

இவர் படம் பார்த்து கற்றுக் கொண்டேன்
அதோடு கமல் இருக்கும் மேடை ஒன்றில் லோகேஷ் கனகராஜ், நான் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றியதில்லை. சினிமா இன்ஸ்ட்யூட்டில் படித்ததில்லை. இவருடைய படங்களை தான் பார்த்துள்ளேன் என பேசி உள்ளார். இந்த வீடியோவை அதிகமானவர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











