twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நான் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெறவில்லை“… மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் !

    |

    சென்னை : மாநகரம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ஓர் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்ந்து இருக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தினை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேர்ஷனல் தயாரித்துள்ளது.

    ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

    80 வயதை தொடும் இளையராஜா, திருக்கடையூரில் சதாபிஷேகம் விழா.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க! 80 வயதை தொடும் இளையராஜா, திருக்கடையூரில் சதாபிஷேகம் விழா.. யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க!

    விக்ரம்

    விக்ரம்

    பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றிய நிறைய தகவல்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. ஜூன்-3ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் இருவரும் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நான் ரொம்பவே சாப்ட்

    நான் ரொம்பவே சாப்ட்

    இந்நிலையில், விக்ரம் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், நான் இயக்கிய கைதி, மாஸ்டர் படங்களில் வன்முறை சற்று அதிகமாகவே இருக்கும். அதேபோல விக்ரம் படமும் கிரைம் ஆக்ஷன் பின்னணியில் நகர்கிறது. என் படங்களில் வன்முறை அதிக இருந்தாலும், நான் ரொம்பவே சாப்ட் ஆன ஆள், எனக்கு சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா படம் மிகவும் பிடிக்கு என்றார்.

    அதிர்ஷ்டத்தால் அல்ல

    அதிர்ஷ்டத்தால் அல்ல

    என்னுடைய முந்தைய படங்கள் போலவே விக்ரம் படத்திம் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அடுத்து விஜய் படத்தை இயக்கப்போகிறேன். தயாரிப்பாளர் மற்ற விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றார். மேலும், எனக்கு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைப்பது அதிர்ஷ்டத்தால் அல்ல. வங்கி வேலையை விட்டு விட்டு சினிமாவுக்கு வந்தேன். 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அலைந்து திரிந்த பிறகே படவாய்ப்பு கிடைத்தது என்றார்.

    தளபதி 67

    தளபதி 67

    ஓய்வு கிடைத்தால் கதைகளை உருவாக்குவேன் எப்போதும். உழைத்துக் கொண்டே இருக்கிறேன். மேலும், விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது கூடுதல் சிறப்பு அவர் அறிமுக காட்சி ஷாக்கிங் சர்ப்ரைசாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார். விக்ரம் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தளபதி 67 இயக்க உள்ளார்.

    English summary
    Lokesh Kanagaraj said that, I did not win by luck
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X