Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லோகேஷின் அடுத்த ஹீரோ இவர் தானா ?..சிறப்பான, தரமான பல சம்பவங்கள் காத்திருக்கு போலவே
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் விக்ரம் படத்தின் மூலம் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதனால் இவர் அடுத்து இயக்க போகும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. விஜய்யின் தளபதி 67 படத்தை தான் தான் அடுத்ததாக இயக்க போவதாக லோகேஷ் கனகராஜே அறிவித்து விட்டார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் தெரியாத நிலையில் இந்த படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க போவதாக தகவல் பரவி வருகிறது.
’சேரி’ன்னு
சொல்லாதீங்க
பார்த்திபன்..
ப்ளூ
சட்டை
மாறன்
விளாசல்..
செருப்பு
மாலை
பிரச்சனைக்கும்
ட்வீட்!

கமல் - ரஜினி படத்தை இயக்கும் லோகேஷ்
இதற்கிடையில் புதிய தகவலாக கமல் - ரஜினி இணைந்து தயாரிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் கமல் - ரஜினி இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் 2023 ம் ஆண்டு இறுதியில் அல்லது 2024 ம் ஆண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தளபதி 67 எப்போ ஆரம்பம்
மற்றொரு புறம் லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2, விக்ரம் 3 உள்ளிட்ட பல படங்களை கையில் வைத்துள்ளார். இதனால் எந்த படத்தை முதலில் இயக்க போகிறார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் லோகேஷ் தற்போது தளபதி 67 படத்தின் வேலைகளில் தான் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் ஷுட்டிங் அக்டோபர் மாதம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் என்ட்ரியாகும் லோகேஷ்
இந்நிலையில் லேட்டஸ்ட் மாஸ் தகவலாக, தென்னிந்தியாவில் பிரபலமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி ப்ரொடக்ஷன்ஸ்,லோகேஷ் கனகராஜை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறதாம். அதுவும் சல்மான் கானை ஹீரோவாக வைத்து மைத்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை தான் லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறாராம்.

ஒப்பந்தமும் முடிவாகிடுச்சா
கடந்த 2 ஆண்டுகளாகவே மைத்ரி ப்ரொடக்ஷன்ஸ் சல்மான் கானை வைத்து படம் இயக்க பெரிதும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக சல்மான் கானிடம் பல கதைகள் சொல்லப்பட்டும் ஒன்றும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் விடாமல் முயற்சி செய்து, தற்போது லோகேஷ் கனகராஜை வைத்து ஒப்பந்தத்தை முடித்து விட்டார்களாம்.

அட இது செம தகவலாக இருக்கே
சல்மான்கான் தற்போது காட் ஃபாதர் பட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் உள்ளார். இந்த சமயத்தில் சமீபத்தில் மைத்ரி ப்ரொடக்ஷன்ஸ், லோகேஷ், சல்மானின் ரகசிய சந்திப்பு நடந்துள்ளது. இதில் படம் பற்றி பேசி, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சல்மான் மற்றும் லோகேஷ் தற்போது கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு இந்த புதிய படம் துவங்கப்பட உள்ளதாம்.

முன்னாடியே லோகேஷிற்கு வாய்ப்பு வந்ததா
லோகேஷ் இயக்கத்தில் நடிக்க சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன் கடந்த ஆண்டு, மாஸ்டர் இந்தி ரீமேக்கை லோகேஷ் தான் சல்மானை வைத்து இயக்க வேண்டும் என தயாரிப்பாளர் முகுந்த் கேதானி கேட்டுள்ளார். ஆனால் பல காரணங்களால் அந்த படம் முடியாமல் போனது.

இதெல்லாம் எப்போ நடந்தது
கடந்த 10 ஆண்டுகளாகவே தென்னிந்திய டைரக்டர்கள் பலரும் சல்மான் கானை இயக்க கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதற்கு முன் அட்லீயே சல்மானிடம் பல கதைகளை சொல்லி உள்ளாராம். அவைகள் முடியாமல் போனதால் தான் ஷாருக்கானை இயக்க சென்று விட்டாராம். டைரக்டர் ஷங்கரும் ஆர்சி 15 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சல்மான் கானிடம் கேட்டுள்ளார்.இதே போல் தெலுங்கு டைரக்டர்களான த்ரிவிக்ரம், கொரடலா சிவா ஆகியோர் சல்மான் கானிடம் கதை சொல்லி அந்த படங்கள் முடியாமல் போய் உள்ளது.
Recommended Video

லோகேஷின் அடுத்தடுத்த படங்கள்
கடைசியாக லோகேஷ் கனகராஜிற்கு தான் சல்மான் கானை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தளபதி 67 படத்தை முடித்த பிறகு சல்மான் கான் உடனான படத்தை தான் லோகேஷ் இயக்க போகிறாராம். அந்த படத்தை முடித்த பிறகு தான் கைதி, விக்ரம் 3 பட வேலைகளை துவங்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வரிசையாக லோகேஷின் பல தரமான சம்பவங்கள் காத்திருப்பதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
அயலி வெப்சீரிஸில் இடம்பெற்ற டீட்டெய்லான மாதவிடாய் காட்சிகள்.. இந்த அளவுக்கு வீரியம் அவசியம் தானா?
-
220 கோடி பட்ஜெட்டில் அஜித்தின் ஏகே 62... கன்ஃபார்மா டைரக்டர் அவரே தான்... விலகிய அனிருத்?