Don't Miss!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மேடையில் வைத்துக்கொண்டே பாரதிராஜாவை கலாய்த்த லோகேஷ் கனகராஜ்: இப்போ ரொம்ப சந்தோஷமாவும் இருக்குதாம்!
சென்னை: தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா. சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் அமர்ந்திருந்த இயக்குநர் பாரதிராஜா குறித்து லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்யமாக பேசினார்.

மாநகரம்
இயக்குநர்களிடம் உதவியாளராக வேலை பார்க்காமல், தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். குறும்படங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த லோகேஷ் கனகராஜ், வெள்ளி திரைக்காக 'மாநகரம்' படத்தை முதலாவதாக இயக்கினார். அசத்தலான விமர்சனங்களையும் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் பெற்ற இத்திரைப்படம், சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் ஹிட் கைதி
'மாநகரம்' படத்தின் மேக்கிங், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களையும் கவனிக்க வைத்தது. அந்த வகையில், கார்த்தியுடன் அவர் கூட்டணி வைத்த 'கைதி' இரண்டாவதாக வெளியானது. காதல், பாட்டு, சென்டிமெண்ட் என தமிழ் சினிமாவில் இருக்கும் பழைய பஞ்சாங்கங்கள் எதுவும் இல்லாம, ஆக்சன் தர்பார் நடத்திய 'கைதி', சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது.

தளபதியுடன் மாஸ்டர்
கார்த்தியின் 'கைதி' வெற்றிப் பெற்றதை அடுத்து, கோலிவுட் தளபதி விஜய்யுடன் மெகா கூட்டணி வைத்தார் லோகேஷ். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அனிருத் மியூசிக் என மாஸ்டர் படமும் ரசிகர்களுக்கான ஆக்சன் ட்ரீட்டாக அமைந்தது. இந்நிலையில், விஜய் - லோகேஷ் காம்போ மீண்டும் இணையவுள்ளது, ரசிகர்களை இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

ஃபேன் பாய் சம்பவம்
மாஸ்டரைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் தான், தற்போதைய நிலையில் தரமான சம்பவம் எனலாம். கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி என அசுரர்களின் நடிப்பில் திரையரங்குகளில் ஆர்ப்பரித்த 'விக்ரம்' 500 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி வேடிக்கைக் காட்டியது. மேலும், 'விக்ரம்' படத்தின் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யாவையும் என்ட்ரி கொடுக்க வைத்து, அடுத்த பாகம் பத்தியும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

பாரதிராஜாவை கலாய்த்த லோகேஷ்
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவில் லோகேஷ் கலந்துகொண்டார். இதில் இயக்குநர் பாரதிராஜாவும் பங்கேற்றார். அப்போது பேசிய ;லோகேஷ், "பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்துள்ளதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது அருகில் உக்காரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு நன்றி
தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், "என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது 'விக்ரம்' வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.