Don't Miss!
- Sports
BBL டி20 லீக் - 19 வயது வீரர் செய்த சம்பவம்.. 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் அணி
- News
அசாமில் குழந்தை திருமணம்: கைது பண்ணுறது சரி..கைதானவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் பொறுப்பு..ஒவைசி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லோகேஷ் ஹிட் லிஸ்ட்டில் சியான் விக்ரம், ராகவா லாரன்ஸ்... அடுத்தடுத்து அரங்கேறும் சீக்ரெட் மிஷன்ஸ்
சென்னை:
மாநகரம்
திரைப்படம்
மூலம்
அறிமுகமான
லோகேஷ்,
தற்போது
கோலிவுட்டின்
மோஸ்ட்
வாண்டட்
இயக்குநராக
வலம்
வருகிறார்.
கமல்
நடித்த
விக்ரம்
திரைப்படத்தை
ப்ளாக்
பஸ்டர்
ஹிட்டாக்கிய
லோகேஷ்,
அடுத்து
விஜய்யுடன்
தளபதி
67ல்
இணையவுள்ளார்.
இந்நிலையில்,
லோகேஷின்
ஹிட்
லிஸ்ட்டில்
சியான்
விக்ரம்,
ராகவா
லாரன்ஸ்
இருவரும்
விரைவில்
இணையவுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
வாய்ப்பு
கேட்டால்
மிட்நைட்ல
கால்
பண்றாங்க...வேதனையில்
புலம்பிய
நடிகை!

ஜனவரியில் தளபதி 67
மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தான் இயக்கிய 4 திரைப்படங்களையும் ஹிட்டாக்கினார் லோகேஷ் கனகராஜ். முக்கியமாக கடந்த ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்', கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் ரெக்காட் பிரேக் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளார் லோகேஷ். தற்காலிகமாக தளபதி 67 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ள தளபதி 67 படம் பற்றிய அப்டேட், ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராகும் லோகேஷ்?
விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த முழுமையான அறிவிப்புகள் வாரிசு ரிலீஸுக்குப் பின்னர் தெரிய வரலாம். மேலும், விஜய்யுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவலும் ஜனவரியில் அறிவிக்கப்படலாம். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநராக வலம் வரும் லோகேஷ், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளது கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷுடன் இணையும் விக்ரம?
முதற்கட்டமாக லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். அதில் ஒரு படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி லோகேஷ் தரப்பில் இருந்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாம். அதேநேரம் இநதப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக அவரது உதவி இயக்குநரோ அல்லது வேறு ஒருவரோ இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. கதை, திரைக்கதை, தயாரிப்பு பணிகளில் மட்டும் லோகேஷ் ஈடுபடவுள்ளராம். விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அதன்பின்னரே லோகேஷ் - விக்ரம் கூட்டணி குறித்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாம்.

இரண்டாவது ஹீரோ ராகவா லாரன்ஸ்
அதேபோல் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இன்னொரு படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்தப் படம் குறித்து ஏற்கனவே சில செய்திகள் வெளியாகியிருந்தன. அதன்படி, லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ரத்னகுமார் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், விக்ரம், தளபதி 67 உள்ளிட்ட படங்களில் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணியில் உருவாகும் படம் தான் லோகேஷ் தயாரிப்பில் முதலில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லோகேஷ் கனராஜ்ஜும் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு கைதி 2 விக்ரம் சீக்வெல் ஆகியவற்றை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.