»   »  "பத்து முத்தம்".. லொள்ளு சபா ஜீவாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்

"பத்து முத்தம்".. லொள்ளு சபா ஜீவாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லொள்ளு சபா மூலம் பிரபலமானவர் சந்தானம் மட்டுமல்ல, ஜீவாவும் தான். தீவிர ரஜினி ரசிகரான ஜீவா, சந்தானம் அளவுக்கு சினிமாவில் எடுபடவில்லை என்ற போதிலும் தொடர்ந்து சினிமாவில் தலை காட்டியபடியே உள்ளார்.

பல படங்களில் காமெடியனாகவும், ஹீரோவின் நண்பன் ரோலிலும் நடித்துள்ள ஜீவா, தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். படத்தின் பெயர் ஆரம்பமே அட்டகாசம்.

நாய்க்குட்டி படத்தை எழுதி இயக்கியவரான ரங்காதான் ஆரம்பமே அட்டகாசம் படத்தின் இயக்குநர் ஆவார். தனது முதல் ஹீரோ படம் என்பதால் ஜீவா மிகுந்த சிரத்தையுடன் இப்படத்தில் நடித்து வருகிறாராம்.

காதல் கதை...

காதல் கதை...

வழக்கம் போல காமெடி கலந்த காதல் கதையாம் இது. இருப்பினும் வித்தியாசமாக இருக்குமாம். படத்தில் இளசுகளுக்கேற்ற காட்சிகளும் நிறைய இருக்கும் போல. அதற்கு ஒரு சின்ன உதாரணம் படத்தின் நாயகி சங்கீதா பட்டுக்கும், ஜீவாவுக்கும் இடையே மொத்தம் 10 முத்தக் காட்சிகள் இடம் பெறுகிறதாம்.

கன்னட நடிகை...

கன்னட நடிகை...

இப்படத்தின் மூலம் தான் சங்கீதா தமிழுக்கு முதல் முறையாக அறிமுகமாகிறார். ஆனால் இவர் கன்னடத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்தவராம். எனவே இவருக்கு நடிப்பு புதிதில்லையாம்.

முத்தக்காட்சி...

முத்தக்காட்சி...

பத்து முத்தக் காட்சியும் லிப் லாக் காட்சிகளாம். ஆனால் சென்சாரைத் தாண்டி தப்பி வரும்போதுதான் இறுதியாக எத்தனை முத்தம் இடம் பெறும் என்பது தெரிய வரும்.

ஆரம்பமே அட்டகாசம்...

ஆரம்பமே அட்டகாசம்...

படத்தில் காமெடிக்கு பாண்டியராஜன், சாம்ஸ், வையாபுபரி ஆகியோர் உள்ளனர். படம் ரசிகர்களைக் கவருமா, ஜீவாவுக்கு ஆரம்பமே அட்டகாசமாக இருக்குமா என்பது படம் வந்த பிறகு தெரிந்து கொள்ளலாம்.

English summary
Aarambame attagasam is an upcoming Tamil film starrer Lollu sabha fame Jeeva.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil