‘லொள்ளுசபா’ மாறன் வீட்டு கல்யாணம்... ஓடி வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளுசபா' நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி, சந்தானம், ஜீவா, மனோகர் என ஏராளமான நடிகர்கள் பிரபலமானார்கள். அவர்களில் முக்கியமானவர்களின் ஒருவரான லொள்ளு சபா மாறன் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
'இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கேள்ல' என்ற வசனத்தின் மூலம் 2கே மற்றும் ஜென்ஸீ தலைமுறை கொண்டாடும் நடிகராக இருக்கிறார் மாறன். தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் டைமிங்கில் காமெடி என அசாத்தியமான திறமை கொண்ட மாறன், ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவராக இருந்ததால்,'செட் வடிவமைப்பு' தொடர்பான பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது தான் முதன் முறையாக ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'காமெடி பஜார்' நிகழ்ச்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, லொள்ளுசபா இயக்குனர் ராம்பாலாவுடன் நட்பு ஏற்பட்டது.

லொள்ளுசபா மாறன்: தொலைக்காட்சியில் அறிமுகமான மாறன், சிபிராஜ் நடித்த 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படத்தில் நாயகன் சிபிராஜின் நண்பராக நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, மிலிட்டரி, பச்சக்குதிர, தீபாவளி, வீராப்பு என்று பெயர் சொல்லும்படியான சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்ததால், சில படங்களில் டப்பிங் பேசுவது மற்றும் காமெடி சீரியலில் நடித்து வந்தார். அதன்பின், கண்ணா லட்டு தின்ன ஆசையா, படத்தின் தயாரிப்பாளராகச் சந்தானம் களமிறங்க, லொள்ளு சபா திரைக்கதையாக்கத்தில் ஈடுபட்ட பிரேம், ஆனந்த் இருவரும் இணைந்து 'இனிமே இப்படித்தான்' படத்திற்கான கதையாக்கத்தில் ஈடுபட, அக்குழுவின் உழைப்போடு மாறனும் இணைந்தார்.
திறமையான நடிகர்: அதன் தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1,டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ் என்று சந்தானம் நாயகனாக நடித்த பிற படங்களில் மாறன் காட்டாயம் இருந்தார். தனக்கு காமெடி மட்டுமில்லை குணசித்திர ரோலிலும் பக்கவாக நடிப்பேன் என்பதை 'ஜெ பேபி' திரைப்படத்தில் ஊர்வசியின் மகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். அண்மையில் வெளியாக கூலி திரைப்படத்தில் மாறன், ரஜினிகாந்தின் வலது கையாக நடித்து இருந்தார்.
லொள்ளுசபா மாறன் வீட்டில் கல்யாணம்: இந்நிலையில் லொள்ளு சபா மாறன் வீட்டு கல்யாணம் தடபுடலாக நடைபெற்றது. மாறனின் தம்பி மகன் இறந்துவிட்டதால், அப்பா ஸ்தானத்தில் இருந்து தம்பி மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.இவர்களின் திருமணம் வெள்ளிக்கிழமை கோவில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர் பா ரஞ்சித், நடிகர் சந்தானம், நடிகர் மணிகண்டன், கூல் சுரேஷ், ரெடிங் கிங்ஸ்லி தனது மனைவி சங்கீதாவுடன் வந்திதிருந்தார். மேலும் லொள்ளுசபா ஜீவா, மதுமிதா மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











