»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இந்தி சினிமா உலகின் பாகிஸ்தானிய எதிர்ப்பு படங்கள் இந்தியாவில் வெற்றி பெறுவது போன்று பாகிஸ்தான் சினிமா உலகம் (லாலிவுட்) தயாரித்துவரும் இந்திய எதிர்ப்பு படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.

மொத்தத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள விரோதத்தை வளர்க்கும் ஒரு கருவியாக சினிமா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தி சினிமா உலகம் எடுத்து வெற்றி பெற்ற படங்களான ரோஜா, மிஷன் காஷ்மீர், பார்டர் போன்ற படங்களில் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் செயல்பற்றியும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை பற்றியும் உண்மையை புட்டுப் புட்டு வைத்தன.

பாகிஸ்தானிய எதிர்ப்பு பாலிவுட் படங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதால் பலர் அப்படங்களின கேசட்டுகளை வைத்திருப்பதில்லை. எனினும் ஒருசிலர்அவற்றை திருட்டுத்தனமாக வாடகைக்கு விடுகின்றனர்.

பாலிவுட்டின் பாலிஸியை கடைப்பிடிக்க முயன்றுள்ள பாகிஸ்தான் சினிமா உலகமான லாலிவுட்டில் இந்திய எதிர்ப்பு படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் சினிமா உலக விமர்சகரான ஷாகித் நக்வி உருது நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்தியா பாகிஸ்தானிற்கு எதிராக பயன்படுத்தியசினிமாவை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானும் பயன்படுத்தியிருக்கிறது எனக்கூறியிருக்கிறார்.

எனினும், பாகிஸ்தான் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவரான இஜாஸ் குல் கூறும் போது, சினிமா போன்ற மீடியாக்களை இருநாட்டுஉறவுகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம். அதை விடுத்து இது போன்ற படங்களை தயாரித்து இரு நாட்டு மக்களிடமும் பகையை வளர்ப்பது நல்லதல்லஎன்கிறார்.

பாகிஸ்தான் மக்களில் பலர், இத்தகைய படங்கள், பாலிவுட் படங்களுக்கு தகுந்த வகையில் பதிலளிக்கும் வகையில் இருப்பதாக கருதுகின்றனர்.

கடந்த டிசம்பரில் வெளியான தேரே பியார் மைன் (உன்னுடைய காதலில்) என்ற திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இப்படத்தில், பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவில்களை தரிசிக்க வரும் இந்திய சீக்கிய பெண் ஒருவர், அங்குள்ள பாகிஸ்தானிய இளைஞன் ஒருவனைகாதலிக்கிறாள்.

அவளை விரும்பிய அந்த இளைஞனும் அவளை தொடர்ந்து இந்தியாவிற்கு வருகிறான். ஆனால், அதே சீக்கிய பெண்ணை விரும்பும் இந்திய ராணுவஅதிகாரியின் கையில் சிக்கும் அந்த இளைஞன் சிறையில் கொடுமைப்படுத்துப்படுகிறான்.

பின்னர், தீவிரவாதிகளின் உதவியோடு சிறையிலிருந்து தப்பும் இளைஞன், தனது சீக்கிய காதலியோடு பாகிஸ்தான் திரும்புவதே படத்தின் கதையாகும்.

தேரே பியார் மைன் படத்தை தயாரித்தவரான சாஷத் குல், கடந்தாண்டு தயாரித்த இந்திய எதிர்ப்பு படமான கார் கப் ஆவோ கே வெற்றி பெற்றதைதொடர்ந்தே இப்படத்தை தயாரித்ததாக கூறுகிறார்.

இதனிடையே இப்படத்தில் வரும் பல காட்சிகளை தயாரிக்க பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவுத்துறையும் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர் அங்கார் வாடி. இத்தொடரில் இந்திய ராணுவம் காஷ்மீரில் அட்டூழியம்செய்வதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் மக்கள் விரும்பி பார்க்கும் இப்புகழ்பெற்ற தொடரை தயாரிப்பதற்கு பண உதவியும், தொழில் நுட்ப உதவியும் வழங்கியுள்ளது பாகிஸ்தானின்ராணுவம். எதில் தான் பாகிஸ்தான் ராணுவம் தலையிடுவது என்ற கணக்கு வழக்கே இல்லாமல் போய்விட்டது.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: cinema, militancy, pakistan, world

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil