»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மே 31, 2003

இன்று லண்டனில் மெகா ஸ்டார் நைட்- 2003

ஷார்ஜா:

தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் மெகா ஸ்டார் நைட்-2003 நிகழ்ச்சி இன்று லண்டனில் நடக்கிறது.

நேற்று முன் தினம் துபாய் அல்-அஹ்லி கால் பந்தாட்ட மைதானத்தில் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழாவைநடத்தி முடித்த நடிகர், நடிகைள் லண்டன் போய் சேர்ந்துவிட்டனர்.

துபாய் நிகழ்ச்சியில் ரஜினி, கமல் போன்றவர்கள் இதில் பங்கேற்கவில்லை. கோகோ கோலா நிறுவனத்தின்விளம்பர காண்ட்ராக்ட்படி பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ள விஜய்யும் வரவில்லை. லண்டன்நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்கேற்பது சந்தேகமே.

துபாயில் இருந்து லண்டன் சென்ற நடிகை, நடிகைகள் ஹீத்ரோ ஷெரட்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இன்றிரவு லண்டனின் பிரம்மாண்டமான அரோனா ஹாலில் இவர்களின் கலை நிகழ்ச்சிகளை நடக்கிறது.

லண்டனில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அங்கு வசிக்கும இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்புஎழுந்துள்ளது.

  • துபாயை கலக்கிய தமிழ் நட்சத்திரங்கள்
  • இன்று துபாயில் மெகா ஸ்டார் நைட்
  • துபாய் புறப்பட்டது நடிகை, நடிகர் குழு
  • லண்டன் செல்லும் நடிக, நடிகைகளுக்கு கடும் எதிர்ப்பு
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil