மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..அதிரடி காட்டும் போலீஸ்..அம்மணி வசமாக சிக்கிட்டாங்க!
சென்னை : தலைமறைவாக உள்ள மீராமிதுனுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீரா மிதுனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவுக்கு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏற்கனவே பல மோசடி புகார்கள் மற்றும் கொலை முயற்சி புகார்களிலும் இவர் சிக்கி உள்ளா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் இயக்குநர் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால் குறும்படத்தை போட்டுகாட்டி, மீரா மிதுனின் மூக்கை உடைந்தார் கமல்.

மீரா மிதுன்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த மீரா மீது, விஜய் டிவி, பிக்பாஸ், கமல் ஹாசன் என ஒருவரையும் விட்டுவைக்காமல் அவர்கள் பற்றி தாறுமாறாக பேசினார். அதுமட்டும் இல்லாமல், தமிழ் சினிமா தன்னை புறக்கணிப்பதாகவும், பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து என்னைப்போலவே மாற ஆசைப்படுவதாக கூறி இணையத்தில் அவ்வப்போது வந்து கடுப்பேத்தி வந்தார். அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

7 பிரிவுகளில் வழக்கு
இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை மீரா மிதுன் பட்டியலின இன மக்கள் குறித்து தகாத முறையில் தரக்குறைவாக பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்னது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறும் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஜாமீனில் வெளியில் வந்தார்
போலீசார் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் ஆண் நண்பருடன், கேரளாவில் இருந்த போது அவரை தமிழக போலீசார் கொத்தாக தூக்கினர். இதையடுத்து, போலீசார் என்னை கொடுமைப்படுத்துனாங்க, சாப்பாடு வாங்கி தரல, தண்ணீ தரல என அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.போலீசாரிடம் இவரின் பருப்பு வேகாததால், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன், சில மாதங்கள் கழித்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

லுக் அவுட் நோட்டீஸ்..
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் மீராமிதுன் போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார். இதையடுத்து,மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் நாளை கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











