லோபசஸ் கைவண்ணம்.. ’ஃப்ரோஸன் 2’விலும் உருக வைக்கும் பாடல்கள்!

ஃப்ரோஸன் படம் ஒரு அனிமேஷன் இசைக்காவியம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த படத்தில் உயிரை உருகவைக்கும் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பாகமான ஃப்ரோஸன் 2விலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்கள் இடம்

நியூயார்க்: டிஸ்னியின் ஃப்ரோஸன் திரைப்படம் ஒரு அனிமேஷன் இசைக்காவியம். 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'Let it Go' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.

பெற்றோர்களை இழந்துவிட்டு புதிய அரசியாக முடிசூடிக்கொண்ட எல்சா தனது சாம்ராஜ்யத்தையே பனியில் உறைய வைத்துவிட்டு தன்னையும் ஒரு பனி சிறையில் அடைத்துக் கொண்டு பாடும் அந்த பாடல் கேட்போர் மனங்களை உருகவைத்தது.

Lopezes Return With Haunting Melodies That Will Take You Into the Unknown In Frozen 2

ஃப்ரோஸன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'Let it Go' பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களையும் கிறிஸ்டன் அண்டர்சன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் தம்பதியினர் எழுதியிருந்தனர். ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது 'Let it Go' பாடலுக்கு கிடைத்த நிலையில், 6 வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகியுள்ள ஃப்ரோஸன் 2 படத்திற்கும் அந்த தம்பதியினரே 7 பாடல்களை எழுதியுள்ளனர்.

Lopezes Return With Haunting Melodies That Will Take You Into the Unknown In Frozen 2

எல்சா தான் யார் என்பதை அறிந்து கொள்ள முதல் பாகத்தில் எப்படி 'Let it Go' பாடல் மையக் கருவாக இருந்ததோ அதே போல, இரண்டாம் பாகத்தில் 'Into the Unknown' பாடல் ஃப்ரோஸன் 2 படத்தின் மையக் கருத்தை கூறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்ற ரகசியத்தை இயக்குநர் ஜெனிஃபர் லீ வெளியிட்டுள்ளார்.

ஃப்ரோஸன் படத்திற்கு பாடல்கள் எழுத லோபசஸ் தம்பதியினரின் மகள்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததாக முதல் பாகத்தின் வெற்றி விழாவின் போது லோபசஸ் தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது, தங்கள் மகள்களும் வளர்ந்துவிட்டதாகவும், எல்சா மற்றும் ஆன்னாவும் வளர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

Lopezes Return With Haunting Melodies That Will Take You Into the Unknown In Frozen 2

'Let it Go' பாடலை போலவே எல்சா மற்றும் ஆன்னாவின் அன்னையான ராணி இடுனா பாடும் தாலாட்டு பாடலான 'All is Found' பாடலும் ஃப்ரோஸன் ரசிகர்களின் ஃபேவரைட் தாலாட்டு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட இன்னும் அருமையான வரிகளில் பாடல்களை உருவாக்கியுள்ளதாக லோபசஸ் தம்பதியினர் கூறியுள்ளது ஃப்ரோஸன் படத்தின் பாடல்களுக்கான ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X