“ஐ லவ் யூ”.. அன்பையும் தந்துவிட்டு முதல் பதிவிலேயே மன்னிப்பும் கேட்ட லாஸ்லியா.. யார்கிட்ட தெரியுமா?

லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா | losliya interview about her marriage

சென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு வெளியிட்டுள்ள தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் லாஸ்லியா.

பிக் பாஸ் சீசன் 3யில் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பார்வையாளர்களிடம் அதிக ஆதரவைப் பெற்றவர் லாஸ்லியா தான். இலங்கையில் இருந்து வந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவின் நடவடிக்கைகள் ரசிக்கும்படி இருந்தன.

இடையில் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் லாஸ்லியா. அதனால் ரசிகர்களிடையே அவருக்கு ஆதரவு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அவருக்கு ஆதரவு அதிகமாகியது. கவிலியா என்ற பெயரில் தனியே ஆர்மிக்களும் உருவாகின.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மக்களின் ஆதரவுடன் பைனல் வரை வந்த லாஸ்லியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்தது. பிக் பாஸில் இருந்து வெளியேறியவுடன் அவர் சமூகவலைதளத்தில் என்னப் பதிவு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

வனிதா வீடு

வனிதா வீடு

ஆனால், அவரோ வனிதா, அபிராமி, சாண்டி என சகபோட்டியாளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரத்தை செலவிட்டு வந்தார். அந்தப் புகைப்படங்களையாவது தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் லாஸ்லியா அதைச் செய்யவில்லை.

ரசிகர்களுக்கு நன்றி

பின்னர் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார் லாஸ்லியா. தற்போது அதன் தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், "முதலில் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்து அளவு கடந்த அன்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

ஐ லவ் யூ சோ மச்

ஐ லவ் யூ சோ மச்

நான் ரொம்ப ரொம்ப உங்களை நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். ஐ லவ் யூ சோ மச்" என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X