»   »  அவளுக்கென்ன அழகிய முகம்!

அவளுக்கென்ன அழகிய முகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அவளுக்கென்ன அழகிய முகம் என்பது பிரபலமான பாடல். இந்த பாடலின் முதல்வரியை படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டனர். காதலைப்பற்றி படம் என்றாலே சுவாரஸ்யம்தான்... காதலுடன் நகைச்சுவையும் கலந்தால் ரசிகர்களை எளிதில் கவரலாம் என்ற நம்பிக்கையில் இளைஞர் ஒருவர் தயாரிக்கும் படம்தான் அவளுக்கென்ன அழகிய முகம்.

வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்ற கதைதான் அவளுக்கென்ன அழகிய முகம்.

இளம் தயாரிப்பாளர்

இளம் தயாரிப்பாளர்

இன்றைய காலங்களில் சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவன் ஒருவர் 22 வயதில் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.கேசவன் என்பவர் இயக்குகிறார்.

காதலும் நகைச்சுவையும்

காதலும் நகைச்சுவையும்

இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம். நடிப்பவர்கள் பலரும் புதியவர்கள். பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.

கோவை டூ மதுரை

கோவை டூ மதுரை

கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறதாம். கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாம்.

வைரமுத்துவின் வைர வரிகள்

வைரமுத்துவின் வைர வரிகள்

படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.

அழகிய கதாநாயகிதான்

அழகிய கதாநாயகிதான்

கதாநாயகர்கள் என்னவோ சுமார் மூஞ்சி குமார்கள்தான் என்றாலும் கதாநாயகி படத்தின் பெயரைப் போல அழகிய முகம்தான் என்று ஸ்டில்ஸ் பார்த்த ரசிகர்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தொழில் நுட்ப கலைஞர்கள்

படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம்: ஷங்கர், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி. தயாரிப்பு மேற்பார்வை: அன்பு செல்வன், கதிரவன் ஸ்டுடியோஸ். படம் ரசிகர்களைக் கவருமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Avalukkenna Alagia mugam love and comedy sentiment story.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil