»   »  சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா

சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டைகர் ஜிந்தா ஹை படப்பிடிப்பு தளத்தில் முன்னாள் காதலர்களான சல்மான் கானும், கத்ரீனா கைஃபும் நெருக்கமாக இருக்கிறார்களாம்.

இங்கிலாந்தில் இருந்து பாலிவுட் வந்த கத்ரீனா கைஃப் நடிகர் சல்மான் கானின் காதலி ஆனார். அதன் பிறகு கத்ரீனாவின் கெரியர் சூப்பராக பிக்கப்பானது.

பின்னர் அவர் சல்மான் கானை பிரிந்தார். இந்நிலையில் சில நடிகைகள் பாலிவுட்டில் பெரிய ஆளாக என் மகனை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சல்மானின் தந்தை வருத்தம் தெரிவித்திருந்தார்.

டைகர்

டைகர்

ஏக் தா டைகர் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் டைகர் ஜிந்தா ஹை என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏக் தா டைகரில் நடித்த சல்மானும், கத்ரீனாவும் தான் இதிலும் நடிக்கிறார்கள்.

சல்மான்

சல்மான்

காதலர் ரன்பிர் கபூரை பிரிந்து தனியாக வாழும் கத்ரீனா கைஃப் டைகர் ஜிந்தா ஹை செட்டில் சல்மானிடம் மிகவும் பாசமாக பழகுகிறாராம். சல்மானும் கத்ரீனா மீது ஓவர் பாசமாக உள்ளாராம்.

காதல்

காதல்

சல்மானும், கத்ரீனாவும் பழகிக் கொள்ளும் விதத்தை பார்த்தால் அவர்கள் காதலை புதுப்பித்துக்கொள்வார்கள் போன்று என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

கத்ரீனா

கத்ரீனா

சல்மானும், கத்ரீனாவும் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் ஒரே கடலையாம். ஜக்கா ஜசூஸ் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் கத்ரீனாவுக்கு அடிபட்டு முதுகு வலியால் அவதிப்படுவதை பார்த்து சல்மான் ரொம்ப ஃபீல் பண்ணுகிறாராம்.

English summary
Salman Khan and Katrina Kaif have re-united again for their next movie Tiger Zinda Hai and if reports are to be believed they share a ''very very warm'' equation on the sets of the movie. The rumours of them giving their relationship a second chance have already started doing the rounds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil