ரஜினி சாருக்கு நான் தான் ‘லவ் டுடே‘ ஹீரோனு தெரியல..பிரதீப் ரங்கநாதனின் கலகல பேட்டி!

சென்னை : லவ் டுடே படத்தில் நான் தான் ஹீரோ என்று ரஜினி சாருக்கு தெரியல என இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், வெளியான 'லவ் டுடே' படத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார்.

கதாநாயகியாக இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லவ் டுடே

லவ் டுடே

இன்றைய இளம் தலைமுறையின் காதலை அப்பட்டமாக புட்டு புட்டு வைத்துள்ளது லவ் டுடே. அத்தியாவசியமாகிவிட்ட செல்ஃபோன், தேவையே இல்லாத பல ரகசியங்களை வைத்திருக்கும் பெட்டியாக மாறி வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அழகாக சொல்லி இருக்கிறார். நகைச்சுவை, சென்டிமெண்டுடன் கதை அழகாக நகர்கிறது.

வாரிக்குவிக்கும் வசூல்

வாரிக்குவிக்கும் வசூல்

லவ் டுடே படத்திற்கு முதல் நாள் சுமாரான வரவேற்பு தான் கிடைத்த நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்ததால், திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருவதால் படம் வசூலை வாரி குவித்து 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்

ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்

லவ் டுடே திரைப்படம் வெற்றி பெற்றத்தை அடுத்து, இயக்குநர் பிரதீப், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், படம் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இரண்டாவது படத்திலேயே ஹீரோவாக நடிப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதீப். இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோல ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன் அது தான் இன்று நடந்துள்ளது.

ஐ லவ் யூ டூ

ஐ லவ் யூ டூ

ஆனால், இவ்வளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. நான் நினைத்ததை விட அதிகமான அன்பு அனைவர் இடத்திலிருந்து கிடைத்துள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மீது அன்பு வைத்த ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஐ லவ் யூ டூ என்றார்.

ரஜினியை சந்திதேன்

ரஜினியை சந்திதேன்

லவ் டுடே படத்தை பார்த்து விட்டு ரஜினி பாராட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதீப். எனக்கு ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்ததுமே படம் சூப்பர் எக்ஸலண்ட் என பாராட்டினார். படத்தில் நடித்த ஹீரோ நல்லா நடிச்சு இருக்கான் யார் அந்த பையன் என்றார். உடனே, நான் தான் சார் அது என்றதும். வாவ் சூப்பர் நல்லா நடிச்சியிருக்கீங்க என்றார். ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வாங்க என்றார் எனக்கு அப்போது தலை கால் புரியவில்லை.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

அவர் வீட்டிற்கு சென்றதும் பொன்னாடை போர்த்தி என்னை வரவேற்றார். படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு என்று, ஒவ்வொரு காட்சி பற்றியும் பேசினார். அதே போல கோமாளி படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற விஷயத்தை கேட்டார். அதவிடுங்க அது சும்மா பன் என்றார். அந்த அரை மணிநேரம் உண்மையில் நான் மகிழ்ச்சியின் இல்லையில் இருந்தேன் என்றார். ரஜினியிடம் இருந்து வந்த பாராட்டு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X