வசூலில் சம்பவம் செய்த லவ் டுடே… விஜய்க்கு கதை சொன்ன பிரதீப்… லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

லவ் டுடே படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாடும் லவ் டுடே

ரசிகர்கள் கொண்டாடும் லவ் டுடே

ஜெயம் ரவியின் கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே மேக்கிங்கில் மாஸ் காட்டினார். 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான கோமாளி, 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. அதேபோல் தற்போது வெளியாகியுள்ள லவ் டுடே திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தண்ணி காட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே கடந்த வாரம் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரதீப் ரங்கநாதனுடன் சத்யராஜ், ராதிகா, இவானா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

லவ் டுடே கலெக்‌ஷன்ஸ்

லவ் டுடே கலெக்‌ஷன்ஸ்

லவ் டுடே படத்தின் ட்ரெய்லர், பாடல்களுக்கு நல்ல ரீச் கிடைத்ததால், முதல் நாளில் இருந்தே தரமான ஓப்பனிங் கிடைத்தது. இதனால், முதல் நாளில் மட்டும் 3 கோடி ரூபாய் வசூல் செய்த லவ் டுடே, அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் பங்கம் செய்துள்ளது. அதன்படி முதல் வாரத்தில் இதுவரை 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தின் மொத்த பட்ஜெட்டே 10 கோடிக்குள் தான் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், முதல் 4 தினங்களில் மட்டும் 20 கோடி வசூலித்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

விஜய்க்கு கதை ரெடி

விஜய்க்கு கதை ரெடி

லவ் டுடே படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் கலெக்‌ஷன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை தான் பிரதீப் ரங்கநாதன் இப்போது பயன்படுத்தியுள்ளார். இந்த டைட்டிலின் உரிமையை வாங்குவதற்காக விஜய்யை பிரதீப் நேரில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது விஜய்க்காக பிரதீப் எழுதியிருந்த கதையையும் கூறியுள்ளாராம். விஜய்யும் அந்த கதை பிடித்திருப்பதாக பிரதீப்பிடம் தெரிவித்துள்ளார்.

உண்மையை சொன்ன பிரதீப்

உண்மையை சொன்ன பிரதீப்

ஏற்கனவே விஜய்க்கு கதை கூறியது குறித்து பிரதீப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், லவ் டுடே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் விரைவில் விஜய்யுடன் பிரதீப் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அவரிடமும் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதனையடுத்து விஜய்யின் படம் இயக்குவது குறித்து பேசியுள்ள பிரதீப் ரங்கநாதன், இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. விஜய்க்கு கதை சொன்னது உண்மைதான், ஆனால், அது உடனடியாக படமாகுமா எனத் தெரியவில்லை. கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X