»   »  அருமையான தாலாட்டு பாடல்கள்: ஆபிஸில் கேட்டு தூங்கிடாதீங்கய்யா!

அருமையான தாலாட்டு பாடல்கள்: ஆபிஸில் கேட்டு தூங்கிடாதீங்கய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக தூக்க தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஏகப்பட்ட தாலாட்டு பாடல்கள் இருந்தும் இந்தியர்கள் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்.

இன்று உலக தூக்க தினம் ஆகும். இன்றைய டென்ஷன் உலகில் அனைவராலும் படுத்தவுடன் தூங்க முடிவது இல்லை. அதிலும் குறிப்பாக இந்தியர்கள் தான் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நாளில் உங்களை தூங்க வைக்க உதவும் சில திரைப் பாடல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தூக்கம் உன் கண்களை

ஆலயமணி படத்தில் எஸ். ஜானகி பாடிய தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே பாடலை கேட்டால் தூக்கம் வராதவர்களுக்கு கூட வரும்.

நீரோடும் வைகையிலே

பார் மகளே பார் படத்தில் வரும் பாடல்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....

இந்த பச்சைக்கிளிக்கொரு

நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன் பாடலை கேட்டால் நிச்சயம் தூக்கம் வரும்.

காலமிது


சித்தி படத்தில் வரும் பாடல்

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்

கண்ணன் வருவான்

பஞ்சவர்ணக்கிளி பட பாடல்

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

மன்னவா மன்னவா

வால்டர் வெற்றிவேல் பட பாடல்

மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும்தேனோ மரகத வீணை தானோ

ஆரிரோ ஆராரிரோ


தெய்வத் திருமகள் பட பாடல்

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

தாயாக தந்தை மாறும் புது காவியம்

ஆராரோ ஆரிராரோ

சிறுத்தை பட பாடல்

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

English summary
Today is world sleep day. Listen to some lullabies and go to sleep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil