»   »  லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு... விஷால், ஜெயம் ரவி பங்கேற்பு!

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு... விஷால், ஜெயம் ரவி பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது.

இது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி,ஐ,டி பல்கலைகழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறுகையில், "லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும் , டைரக்டர்களாகவும், ஊடக துறையிலும் உள்ளனர். அவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

Loyolla College Old Students conference

நடிகர் ஜெயம்ரவி, விஷால், பிரபு, வெற்றிமாறன் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். 2-வது நாள் நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்," என்றார்.

Loyolla College Old Students conference

லயோலா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ச.லாசர் அடிகளார், முதல்வர் ம. ஆரோக்கியசாமி அடிகளார், முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநர் தாமஸ் அடிகளார் ஆகியோர் கூறுகையில், "கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தவுள்ளோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் , மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம், கல்லூரியின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளது," என்றார்.

Loyolla College Old Students conference
English summary
Loyolla College Old Students conference will be held on Oct 1 & 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil