»   »  தரண் இசையில் மீண்டும் ஒரு குத்துப் பாட்டு பாடிய எல் ஆர் ஈஸ்வரி!

தரண் இசையில் மீண்டும் ஒரு குத்துப் பாட்டு பாடிய எல் ஆர் ஈஸ்வரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் தமிழில் துள்ளல் இசைப் பாடல் (இப்போது அதுக்குப் பேருதான் குத்துப் பாட்டு) பாட எல் ஆர் ஈஸ்வரியை விட்டால் ஆள் கிடையாது. அத்தனை வெரைட்டியான பாடல்களிலும் வெளுத்துக் கட்டுவார்.

எண்பதுகளுக்குப் பிறகு அவர் அம்மன் பாடல்கள் பாடுவதில் பிஸியாகிவிட்டார்.

LR Eswari renders Kuthu song again

இப்போது மீண்டும் சினிமாவில் பாட ஆரம்பித்துள்ளார். முன்பு ஒஸ்தி படத்தில் தமன் இசையில் டி ராஜேந்தருடன் இணைந்து 'கலாசலா...' பாடல் பாடினார். படம் எப்படியோ... ஆனால் இந்தப் பாட்டு செம ஹிட்டு!

இப்போது மீண்டும் ஒரு குத்துப் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார் எல்ஆர் ஈஸ்வரி. தொல்லைக் காட்சி படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலுக்கு இசை தரண். நா முத்துக்குமார் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் குறித்து எல் ஆர் ஈஸ்வரி கூறுகையில், "இந்த பாடலில் இருக்கும் வரிகளும் அதற்கான இசையும் அருமையாக இருக்கிறது. மீண்டும் ஒரு 'கலாசலா' பாடலைப்போல் வெற்றி பெரும் என்றார்.

'கயலாலயா நிறுவனம்' சார்பாக பாலசெந்தில் ராஜா இந்தப் படத்தை தயாரிக்க எம். சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின், ஜனனி, ஆதவன், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த பாடலின் படபிடிப்புக்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

English summary
Veteran playback singer LR Eswari is rendering a kuthu song for Thollaikkatchi movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil