நான் ஏங்கி இருக்கேன்.. இளையராஜா ஏ.ஆர். ரகுமான் எல்லாம் சும்மா.. லப்பர் பந்து இயக்குநர் தெறி ஸ்பீச்!
சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே நேற்று அதாவது செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கல்வியில் முதலிடம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பேசியதுதான் வந்து குவிகின்றது. இதில் இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசும்போது, " நானும் அரசுப் பள்ளி மாணவன் தான். அரசுப் பள்ளி முன்னாள் மாணவனாக நான் நன்றி சொல்லலாம் என்று வந்திருக்கிறேன். நான் படிக்கும்போது அரசு கொண்டுவந்த பல இலவசத் திட்டங்களை அனுபவித்துள்ளேன். ஏனென்றால் நான் பஸ் பாஸில் இருந்து, முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை என பல இலவச திட்டங்களை நான் அனுபவித்துள்ளேன். அரசின் அனைத்து இலவச திட்டங்களாலும் பயன் பெற்று படித்து அதன் மூலம் நான் பொறியியல் பட்டதாரி ஆனேன்.
நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன். நடுத்தரக் குடும்பம் என்றால் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். இட்லி கறி எல்லாம் ஞாயிற்றுக்கிழமை எடுக்கும் நடுத்தரக் குடும்பம் இல்லை, தீபாவளி, பொங்கலுக்கு எடுக்கும் நடுத்தரக் குடும்பம். இந்த இலவச கல்வித் திட்டங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பயனுள்ளது என்பதை உணர்ந்தவன். எனவே தமிழ்நாடு அரசுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஒரு வேளை சாப்பாடு: ஒரு வேளை சாப்பாட்டின் அருமை என்ன என்பதை நான் நன்கு அறிந்தவன். காலை உணவுத் திட்டம் எப்படி வந்தது என்று கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் அரங்கூரில் இருந்து திட்டக்குடிக்கு 12 கிலோமீட்டர் தொலைவுக்கு பேருந்தில் பயணம் செய்து வரவேண்டும். நான் கலையில் 7.30 மணியில் இருந்து 8 மணிக்குள் பஸ் ஏற வேண்டும். அப்போது எல்லாம் மதியம் எப்படி சத்துணவு போடுகிறார்களோ, அதேபோல் காலையிலும் சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
பாமர மக்களின் குழந்தைகள்: பெரிய பெரிய முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல அரசுகளுக்கு மத்தியில் பாமர மக்களின் குழந்தைகளின் படிப்புக்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு நான் நன்றி சொல்ல வந்ததை பெருமையாக கருதுகிறேன். முன்பெல்லாம் படிக்கும் எண்ணம் இருந்தால் போதும் உங்களை படிக்க வைக்கிறோம் என்று இருந்த நிலைமை, இப்போது படிக்கும் எண்ணத்தையும் ஏற்படுத்துவேன் என்று பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இளையராஜா & ரகுமான்: சச்சின் தெண்டுல்கர் படித்தாரா?, ரகுமான் படித்தாரா? இளையராஜா படித்தாரா என்று கூறுவார்கள். இப்படிச் சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள். அப்படி வென்றவர்கள் எல்லாம் மிகக் குறைவு. படிக்காமல் வென்றவர்கள் 100 பேர்தான் இருப்பார்கள். படித்ததனால் வென்றவர்கள் தான் அதிகம். அதனால் விதிவிலக்கானவர்கள் எப்போதும் முன் உதாரணமாக ஆக முடியாது. எனவே நீங்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு அரங்கில் கூடி இருந்தவக்ரள் மட்டும் இல்லாமல், இணையவாசிகள் மத்தியிலும் நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











