»   »  தியேட்டர்கள் கடும் எதிர்ப்பு: கர்நாடக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் கபாலி ஷோ கேன்சல்!

தியேட்டர்கள் கடும் எதிர்ப்பு: கர்நாடக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் கபாலி ஷோ கேன்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: தியேட்டர்கள் மற்றும் கர்நாடக வர்த்தக சபையின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கபாலியைத் திரையிடம் திட்டம் கைவிடப்பட்டது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சினிமா வரலாற்றிலேயே இல்லாத புது முயற்சியாக இந்தப் படத்தை முதல் மூன்று தினங்கள் பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் திரையிட முடிவு செய்தனர். இதற்காக ஐந்து ஹோட்டல்கள் தேர்வு செய்யப்பட்டன.

Luxury hotel shows of Kabali cancelled in Bangalore

ஒவ்வொன்றிலும் தலா 300 பேர் வரை, நல்ல ஒலித்தரம், இருக்கை வசதியுடன் பார்க்க ஏற்பாடு செய்து அறிவிப்பும் வெளியிட்டனர். ஒரு நபருக்கு கட்டணமாக ரூ 1300 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காட்சியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் தயாரான சூழலில், இந்தக் காட்சிகளுக்கு கர்நாடக வர்த்தக சபை மற்றும் திரையரங்குகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

சினிமாவை தியேட்டர்களில்தான் பார்க்க வேண்டும் என்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ஷோக்களை நடத்தக் கூடாது என்றும் கர்நாடக வர்த்தக சபை கேட்டுக் கொண்டது.

இந்த மாதிரி ஷோக்கள் நடத்துவது சட்டவிரோதம் என தியேட்டர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து கபாலி படத்தின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் காட்சிகளுக்குக் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்தது பெங்களூர் மாநகராட்சி.

English summary
All luxury hotels in Bengaluru that were to screen Kabali have withdrawn their decision owing to pressure from the Karnataka film industry and multiplexes, sources said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil