»   »  கொடி படத்தைக் கைப்பற்றியது லைக்கா!

கொடி படத்தைக் கைப்பற்றியது லைக்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷ் தயாரித்து நடித்து வரும் கொடி படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது லைக்கா நிறுவனம்.

இதற்கு முன் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்', ‘விசாரணை' ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் வாங்கி உலகெங்கும் வெளியிட்டு நல்ல லாபமும் பார்த்தது.


Lyca acquires Kodi rights

இப்போது தனுஷ் நடித்து வரும் படம் ‘கொடி'. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையையும் தற்போது லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது.


கொடி படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கிச் சட்டை படங்களை இயக்கியவர். இந்தப் படங்களையும் தனுஷ்தான் தயாரித்திருந்தார்.


கொடி படத்தின் படிப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர்.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ஜுலை 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

English summary
Lyca Production has acquired the releasing rights of Dhanush's Kodi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil