»   »  புரவி மீது ஏறி பறந்து வருகிறார் "மருதநாயகம்".. 18 ஆண்டுகளுக்குப் பிறகு!

புரவி மீது ஏறி பறந்து வருகிறார் "மருதநாயகம்".. 18 ஆண்டுகளுக்குப் பிறகு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் நடிப்பில் பாதியில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம் தற்போது மீண்டும் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கமல்ஹாசன் எழுதி அவரே தயாரித்து இயக்கிய படம் மருதநாயகம். 1997 ம் ஆண்டு தொடங்கபட்ட இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.

Lyca and Ayngaran taking up Marudhanayagam?

ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருதநாயகம் படம் கைவிடப்பட்டது. அதற்குப்பின் மருதநாயகம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அப்படத்தைத் தயாரிக்க யாராவது முன்வந்தால் படம் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அய்ங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

இதனால் மருதநாயகம் பற்றி மீண்டும் தகவல்கள் வெளியாக ஆரம்பித்து இருக்கின்றன. மேலும் சில நாட்களுக்கு முன்னர் கமல் அளித்த பேட்டியில் லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அய்ங்கரன் படத்தின் ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருப்பதால் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

ரஜினிகாந்தின் எந்திரன் 2 படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Latest buzz in Kollywood Kamal Haasan's Marudhanayagam Movie Restart Again, maybe Lyca and Ayngaran Bankrolling for this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil