»   »  நோ நோ... சிம்பு படத்தை நாங்கள் வாங்கவே இல்லை!- லைகா நிறுவனம் மறுப்பு

நோ நோ... சிம்பு படத்தை நாங்கள் வாங்கவே இல்லை!- லைகா நிறுவனம் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை தாங்கள் வாங்கவில்லை என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வாங்கி தங்கள் பேனரில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகின.

Lyca denies buying 'Achcham Enbathu Madamaiyada'

இந்த நிலையில்தான் பீப் பாட்டு பிரச்சினையை இழுத்துவிட்டார் சிம்பு. நல்ல காலத்திலேயே அவர் படத்தை வாங்க விநியோகஸ்தர்களுக்கு ஆர்வம் கிடையாது. இப்போதோ இவர் போஸ்டரைப் பார்த்தால் சாணி அடிக்கும் என்ற நிலை.

எனவே அவர் நடித்து முடங்கிக் கிடக்கும் இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடையடா போன்ற படங்கள் வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நேரம் பார்த்து, சிம்பு படத்தை நாங்கள் வாங்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கிரியேடிவ் ஹெட் ராஜு மகாலிங்கம் கூறுகையில், "இப்போது நாங்கள் ரஜினி நடிக்கும் 2.ஓ, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம், சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படம் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் இந்திப் படம் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம்.

சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தை நாங்கள் வாங்கவில்லை. தாரை தப்பட்டை படத்தை அய்ங்கரன் நிறுவனம்தான் வாங்கியுள்ளது. நாங்கள் அல்ல," என்றார்.

    English summary
    Lyca Productions denied that they hadn't bought Simbu starring Acham Enbathu Madamaiyada.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil