»   »  எப்போதான் 2.ஓ வரும்? மௌனம் காக்கும் தயாரிப்பாளர்!

எப்போதான் 2.ஓ வரும்? மௌனம் காக்கும் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.ஓ படம் எப்போது வரும் என்பது குறித்து குழப்பமான தகவல்கள் வரும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் எந்த பதிலும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள படம் 2.ஓ. ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவின் அதிக பட்ஜெட் படம் இது. மொத்தம் ரூ 400 கோடிக்கு மேல்.

தாமதம்

தாமதம்

இந்தப் படம் கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய மேலும் அவகாசம் தேவை என்பதால், 2018 ஜனவரி 25-ம் தேதிக்கு ரிலீஸை தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இசை

இசை

இதனால் படத்தின் இசை வெளியீட்டை கடந்த மாதம் துபாயில் பிரமாண்டமாக, அனைவரும் வியக்கும் வகையில் நடத்தினர். ரஹ்மான் இசையில் வெளியான அந்தப் பாடல்கள் பெரும் வரவேற்றைப் பெற்றன. எந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடல் இந்தியாவின் நம்பர் ஒன் பாடலாக அறிவிக்கப்பட்டது.

தேதி

தேதி

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப் போவதாக தகவல் வெளியானது. 2018 ஜனவரிக்கு பதில் ஏப்ரலில் படம் வெளியாகும் என்றனர். கிராபிக்ஸ் பணிகள்தான் இந்த தாமதத்துக்கு காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் லைகா நிறுவனம் எந்த விளக்கமும் கூறவில்லை.

குழப்பம்

குழப்பம்

எந்தத் தேதியில் படம் வெளியாகும் என்பதை லைகா வெளியிடாமல் இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதியை நிச்சயிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

English summary
The release date of Rajinikanth's 2.O isn't finalised yet which creates confusion among producers and fans

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X