»   »  கத்தியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கும் லைகா!

கத்தியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கும் லைகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்தி படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கிறது லைகா நிறுவனம்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தை முதல் முறையாக லைகா நிறுவனம் தயாரித்த போது ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிறுவனத்துடன் எப்படி விஜய் இணையலாம் என தமிழ் அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக கத்தி படம் முதலில் அய்ங்கரன் நிறுவனப் பெயரில் வெளியானது.

Lyca to produce Vijay's 61st movie

ஆனால் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த வழக்கில், 'லைகா நிறுவனம் தமிழகத்தில் படங்கள் தயாரிக்க தடை இல்லை என்றும், லைகா பேனரிலேயே அவர்கள் படங்களை வெளியிடலாம், இதை எதிர்க்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தீர்ப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து பிரமாண்டமாக தயாரிப்பில் குதித்தது லைகா. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து 2.ஓ, பாலிவுட்டின் முதல் நிலை நடிகர் அக்ஷய் குமாரை வைத்து கத்தி ரீமேக், தெலுங்குப் படம் என அடுத்தடுத்து 6 படங்களைத் தயாரித்து வருகிறது.

இப்போது மீண்டும் விஜய்யை வைத்து தமிழில் படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. விஜய் இப்போது நடித்து வரும் 60வது படம முடிந்ததும் இந்த புதிய பட வேலைகள் தொடங்கவிருக்கின்றன.

Read more about: lyca, vijay, லைகா, விஜய்
English summary
Sources say that Lyca Production is producing Vijay's 61st movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil