twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா!

    |

    Recommended Video

    தர்பார் படத்தில் சசிகலா பற்றிய வசனத்தை நீக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு

    சென்னை: தர்பார் படத்தில் சசிகலாவின் ஜெயில் ஷாப்பிங் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக வெளியாகி இருக்கும் படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

    இந்தப் படத்தில் நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதை விடுங்க... அதுல இன்னும் டெர்ரரா இருப்பீங்க... டூ பீஸ் ஹீரோயினை வசமாகக் கலாய்க்கும் ரசிகர்கள்இதை விடுங்க... அதுல இன்னும் டெர்ரரா இருப்பீங்க... டூ பீஸ் ஹீரோயினை வசமாகக் கலாய்க்கும் ரசிகர்கள்

    சசிகலாவை சீண்டி

    தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ஒரு காட்சியில் சசிகலாவை சீண்டி டயலாக் இடம் பெற்றிருந்தது.

    ஜெயில்ல கூட ஷாப்பிங்

    ஜெயில்ல கூட ஷாப்பிங்

    அதாவது, காசு இருந்தா ஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. சவுத் இந்தியால கூட ஒரு கைதி அடிக்கடி ஜெயில்ல இருந்து வெளியே ஷாப்பிங் போனதா செய்தியில் பார்த்தேன் என்ற டயலாக் சசிகலாவை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

    சொத்துக்குவிப்பு...

    சொத்துக்குவிப்பு...

    இந்த வசனத்தை ஜெயில் அதிகாரி ஒருவர் பேச, நடிகர் ரஜினிகாந்த் ஓ.. என கேட்பதாக உள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.

    சசிகலாவின் வக்கீல்

    சசிகலாவின் வக்கீல்

    தர்பார் படத்தில் சசிகலா குறித்த வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும் என சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

    பொதுவானதே..

    பொதுவானதே..

    இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்க எழுதப்பட்டது அல்ல.

    நீக்கப்படும்..

    நீக்கப்படும்..

    இருப்பினும், அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்தால், படத்தில் இருந்து நீக்கப்படுதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    English summary
    Lyca productions has decided to remove the controversy dialogue about Sasikala's jail shopping in Darbar movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X