»   »  தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் லைகா நிறுவனம் களமிறக்கும் 1000 கோடி ரூபாய்!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் லைகா நிறுவனம் களமிறக்கும் 1000 கோடி ரூபாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரிவோம் சந்திப்போம்.... கரு பழனியப்பன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இது. படம் குறித்து சாதகமான விமர்சனங்கள் வந்தாலும், கமர்ஷியலாகப் பெரிதாகப் போகவில்லை இந்தப் படம். இதுதான் இப்போது ஆர்ப்பாட்டமாக இந்திய சினிமாவில் கால் பதித்துள்ள லைகா நிறுவனத்தின் முதல் படம்.

ஆரம்பத்தில் ஞானம் என்ற பெயரில் படம் தயாரித்தவர்கள், லைகா புரொடக்ஷன்ஸாக மாறி தயாரித்த படம் கத்தி. இந்தப் படம் சந்தித்த எதிர்ப்புகள், போராட்டங்கள் உலகறியும். காரணம், லைகா சுபாஷ்கரணுக்கு ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு.

ரூட் க்ளியர்

ரூட் க்ளியர்

ஆனால் சுபாஷ்கரன் அதற்கு விளக்கம் சொல்லி விட்டதோடு, நீதிமன்றம் போய் தங்கள் லைகா பேனரில் படங்கள் தயாரித்து வெளியிட எந்த தடையும் இல்லை என்ற உத்தரவையும் பெற்றுவிட்டனர்.

இப்போது அடுத்த கட்டமாக இந்திய சினிமாவில் தங்கள் இருப்பை ஆர்ப்பாட்டமாக நிலைநாட்ட முனைந்துள்ளனர்.

எந்திரன் 2

எந்திரன் 2

தமிழில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினியை வைத்து ரூ 350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட எந்திரன் 2 ஐ ஆரம்பித்துள்ளனர். மினிமம் பட்ஜெட்டில் ஒரு தமிழ்ப் படத்தையும் ஜிவி பிரகாஷை வைத்து எடுத்து வருகின்றனர்.

தெலுங்கில்

தெலுங்கில்

தெலுங்கில் லைகா நிறுவனம் ராம் சரணுடன் இணைந்து தங்களின் கத்தி படத்தை ரீமேக் செய்கிறது. அந்தப் படத்தின் ஹீரோ சிரஞ்சீவி.

இந்தியில்

இந்தியில்

இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இதே கத்தியை ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸின் உதவியாளர் இயக்குகிறார்.

ரூ 1000 கோடி

ரூ 1000 கோடி

இந்த படங்களைத் தயாரிப்பதோடு, விசாரணை உள்ளிட்ட சில படங்களின் வெளியீட்டு உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளனர் லைகா நிறுவனத்தினர். இவை அனைத்திலும் சேர்த்து லைகா முதலீடு செய்துள்ள தொகை ரூ 1000 கோடி!

English summary
The London Based Lyca Productions is investing Rs 1000 cr in Indian Cinema by producing 5 movies in 3 languages and bought releasing rights of various movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil