இளம் ஹீரோவுடன் மெகா கூட்டணி...அடுத்த அதிரடிக்கு தயாராகும் லைகா ப்ரொடக்ஷன்ஸ்
சென்னை : தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டாப் நடிகர்களின் படங்களை தயாரித்து வருகின்றன. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் இவர்கள் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன.
ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விஜய் நடிக்கும் பீஸ்ட், சூர்யா நடிக்கும் சூர்யா 40 போன்ற பல படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இவற்றில் அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகாவின் மெகா தயாரிப்புக்கள்
இதே போன்று லைகா நிறுவனமும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன், இந்தியன் 2, ராங்கி, டான், ராம் சேது போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இவற்றில் இந்தியன் 2 தவிர மற்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

அதர்வாவுடன் கூட்டணி
லைகா நிறுவனம் தற்போது தனது அடுத்த படத்தை நடிகர் அதர்வாவை வைத்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தை களவாணி, வாகை சூட வா படங்களை இயக்கிய டைரக்டர் சற்குணம் இயக்க உள்ளார். இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

முக்கிய ரோலில் ராதிகா
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மிக முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதர்வா தற்போது நடிக்கும் தெலுங்கு படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளதால், இதைத் தொடர்ந்து லைகா நிறுவனத்தின் படம் துவங்கப்பட உள்ளது.

ஜிகர்தண்டா ரீமேக்கில் அதர்வா
தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியத்தில் ஹிட்டான ஜிகர்தண்டா படம் தற்போது தெலுங்கில், கட்டலகொண்டா கணேஷ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் மூலம் அதர்வா தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

மீண்டும் போலீஸ் ரோலா
தமிழில் அட்ரஸ் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அதர்வா ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏற்கனவே 100 படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த அதர்வா, லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











