»   »  'டாஸ்மாக்' ராஜேஷ் இயக்க, ஜிவி பிரகாஷை வைத்து படமெடுக்கும் லைக்கா!

'டாஸ்மாக்' ராஜேஷ் இயக்க, ஜிவி பிரகாஷை வைத்து படமெடுக்கும் லைக்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட இசையமைக்கும் தொழிலை ஜிவி பிரகாஷ் மறந்துவிட்ட நிலை உருவாகிவிட்டது. அவர் ஹீரோவாக நடித்து வெளியான இரண்டு படங்களும் வசூலில் லாபம் தந்துவிட்டதால், இப்போது பெரிய நிறுவனங்கள் அவரை வைத்துப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டன.

ஜிவி பிரகாஷை வைத்து டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களைத் தந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே இப்போது அவரை வைத்து அடுத்தடுத்து இரு படங்களைத் தயாரித்து வருகிறது.

Lyca Productions ropes in with GV Prakash

இந்த நிலையில் ‘கத்தி' படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தைத்தான் 'டாஸ்மாக்' புகழ் ராஜேஷ் எம் இயக்குகிறார்.

ரஜினி நடிக்கும் எந்திரன் 2 படத்தையும் லைக்காதான் தயாரிக்கிறது என்பது நினைவிருக்கலாம்.

படத் தயாரிப்புடன் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ள லைக்கா, ஏற்கெனவே நானும் ரவுடிதான் படத்தை வெளியிட்டு லாபம் பார்த்தது. அடுத்து தனுஷ் நடித்துள்ள தங்க மகனை வெளியிடுகிறது.

English summary
Lyca International has signed GV Prakash for a new project that is directed by Rajesh M.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil